உங்க கழுத்து கருப்பா இருக்குன்னு கவலையா? அட கவலைய விட்டுட்டு இதை ட்ரை பண்ணுங்க!

7 July 2021, 5:51 pm
how to remove dark patches in neck
Quick Share

எல்லோருக்குமே பார்க்க அழகான சருமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நாம் ஆடை உடுத்தி இருந்தாலும், நம் முகம் எல்லோருக்கும் தெரிவது போல கழுத்துப் பகுதியும் கண்டிப்பாக மற்றவர்கள் பார்வை படும்படி தான் இருக்கும். அதனால் கழுத்துப்பகுதி கருப்பாக இருந்தால் நமக்கே வெளியில் செல்ல சங்கட்டமாக இருக்கும். ஆனால் இதற்கு என்னென்னவோ செயற்கை கிரீம் எல்லாம் முயற்சி செய்து பார்த்து சலிப்படைந்து இருப்பீர்கள். ஆனால் இதற்கான தீர்வு உங்கள் சமையலறையிலேயே உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், உங்கள் சமயலறையில் இருக்கும் உருளைக்கிழங்கு, எலுமிச்சை, தயிர் போன்ற பொருட்கள் கழுத்தில் இருக்கும் கருமையைப் போக்கும் தன்மைக் கொண்டது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக நிறைய பெண்களின் கழுத்துபகுதி கருப்பாக இருக்கும். நகைகள் அணிவதால், உடல் வெப்பம், ஒவ்வாமை போன்றவற்றால் இந்த கருநிறம் தோன்றும். எளிய வீட்டு வைத்தியம் மூலம், நீங்கள் கழுத்தில் இருக்கும் கருநிறத்தை அகற்றலாம். உருளைக்கிழங்கு கழுத்தின் கருமையைப் போக்கும் தன்மைக் கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். அதை கழுத்து முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து கழுத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வர கழுத்தில் உள்ள கருமை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சிறிது தயிரில் கலந்து கழுத்தில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தாலே நல்ல மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, அரை டீஸ்பூன் மஞ்சள், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்றாக கட்டியில்லாமல் கலந்து ஒரு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். அதை கழுத்தில் அங்கு இடைவெளி இல்லாமல் தேய்த்து, கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்து வந்தால் படிப்படியாக கழுத்தில் உள்ள கரு நிறம் மங்கத் தொடங்கும்.

சிறிது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கழுத்தில் பேஸ்ட் போல தடவி, கால் மணி நேரத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் 3 முறை இதைச் செய்வது கழுத்தின் கருமை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

Views: - 325

0

0