மாம்பழம் மற்றும் தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் எப்படி வைக்க வேண்டுமென்று தெரியுமா? முதலில் இதை படிங்க

Author: Dhivagar
1 July 2021, 1:41 pm
how to store mango and watermelon in fridge
Quick Share

கோடை காலத்தில் பழையசோறோ பழச்சாறோ, பானங்கள் எதுவாக இருந்தாலும் ஜில்லென்று இருந்தால் குடிக்க அவ்வளவு அருமையாக இருக்கும். அதுவும் வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில், உணவுகள், பழங்கள் எல்லாம் கெட்டுப்போகாமல் இருக்க குளிர் சாதன பெட்டியைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் சில பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. 

ஏனென்றால், சில உணவு அல்லது உணவுப் பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கும்போது, ​​அதன் தன்மையும் சுவையும் மாறிவிடும். சில சமயங்கள் அவை விஷமாகவும் கூட வாய்ப்புண்டு. அதுவும் முக்கியமாக மாம்பழம் மற்றும் தர்பூசணி பழத்தை குளிர் சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அது ஏன் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும், கோடை காலத்தில் இந்த பழத்தைச் சாப்பிடாதவரையே பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த பழம் எல்லோருக்குமே இஷ்டமான ஒன்று. இதே போல மாம்பழ சீஸனும்  கோடையில் தான். கோடை காலத்தில் மாம்பழங்கள் அதிகமாக கிடைக்கும். இதுபோன்ற சமயத்தில் மலிவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கி அதை குளிர் சாதன பெட்டியில் அடைத்துவிடுகிறோம். இதை பல நாட்கள் வரை குளிர்ச் சாதன பெட்டியிலேயே வைக்கிறோம். அப்படி குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது இந்த பழங்களில் இருக்கும் இயற்கையான சுவையை பாதிக்கப்படும். 

சாதாரணமாக தர்பூசணி பழத்தை வெட்டாமல் அப்படியே நீங்கள் குளிர் சாதன பெட்டியில் வைப்பதனால் அதன் சுவையும் ஏன் தொடர்ந்து வைத்திருந்தால் அதன் நிறமும் கூட மாறிவிடும். அதுமட்டுமில்லாமல், நாம் பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதில் பாக்டீரியாக்கள் உண்டாகவும் கூடும்.

நீங்கள் குளிர்சாதன பெட்டியில் பழத்தை சேமிக்க விரும்பினால், முதலில் பழத்தை வெட்டி தான் சேமித்து வைக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் பழங்களை சேமித்து வைக்க விரும்பினால், முதலில் அவற்றை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் வைக்கவும். பின்னர் அதை வெளியே எடுத்து சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும். அப்போதுதான் அதன் பிறகு தான் வெட்டி சேமிக்க வேண்டும். சேமிக்க வெட்டிய வெட்டப்பட்ட பழங்களை அப்படியே அடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடக்கூடாது.  மூடியுடன் உள்ள ஒரு பாக்ஸை எடுத்து அதில் போட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக வைக்கக்கூடாது. அது நல்லதல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காய்கள் மற்றும் பழங்களை வாங்கினால் அவற்றை தனித்தனியே தான் கூடைகளில் வைத்திருக்க வேண்டும். குளிர்விக்கும்போது பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பல்வேறு வகையான வாயுக்கள் வெளியாகும் என்பதால் அவற்றை தனித்தனியே சேமிப்பதே நல்லது. 

Views: - 421

0

0