ஆண்களே உங்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் குறைகிறதா? காரணம் என்னவாக இருக்கும்? எப்படி சரி செய்யலாம்?

Author: Dhivagar
26 August 2021, 10:36 am
How to tackle depleting sex drive in men
Quick Share

நாள்பட்ட நோய்களால் உண்டாகும் சிக்கல்கள் முதல் பணியிடங்கள், குடும்ப சிக்கல்களால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் என பல காரணங்களால் மனிதனின் தாம்பத்திய  ஆரோக்கியம் பாதிப்படையக்கூடும். அப்படி என்னென்ன காரணங்காளால் தாம்பத்திய வாழ்க்கை பாதிப்படையும், அதற்கு என்னென்ன தீர்வுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களில் தாம்பத்திய வாழ்க்கைக்கான ஆர்வம் குறைவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்:

ஆண்களுக்கு பாலியல் வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கு முன்பு, முதலில் ஆர்வம் குறைவதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். 

நீங்கள் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அதிக திறன் கொண்ட மருந்துகளை உட்கொண்டு வருவதாலும், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மது பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உங்கள் பாலியல் ஆர்வம் குறையக்கூடும்.

துணையுடன் பேசுங்கள்:

உங்கள் பாலியல் ஆர்வம் குறைவதற்கான காரணத்தை நீங்கள் கண்டறிந்தவுடன், அதை உங்கள் துணையுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் துணைவர் உங்களுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் நெருக்கத்தை மேம்படுத்துவதிலும் உங்களுக்கு உதவியாக இருக்க முடியும்.

மன அழுத்தம் குறைக்க வேண்டும்

மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறையக்கூடும். 

எனவே, உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் மன அழுத்தத்தை அதிகமாகமல் கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

குடிப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்

அதிகமான அல்லது தொடர்ச்சியான குடிப்பழக்கம் ஆண்களில் பாலியல் உந்துதலைக் குறைத்து லிபிடோ அளவைக் குறைக்கலாம்.

உங்கள் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தி, உங்கள் பாலியல் செயல்திறனை உயர்த்த, மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

லிபிடோ குறைபாடு

ஆண்களில் லிபிடோ குறைபாடு உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் என்பதால் தேவையில்லாத போதைப் பழக்கங்களை கைவிடுவது நல்லது.

ஆண்களில் ஆற்றல் நிலைகள், பாலியல் உந்துதல் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையை (Testosterone replacement therapy) மக்கள் நாடலாம்.

இது பக்க விளைவுகள் இல்லாதது என்ற போதிலு உங்கள் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும் 

உடல் மற்றும் உளவியல் காரணங்களாலும் குறைந்த லிபிடோ நிலைகளைத் தூண்ட முடியும்.

இதுபோன்ற சமயங்களில், பயிற்சி பெற்ற பாலியல் வல்லுநரை நாடி உதவியைப் பெறுவது சிறந்த தாம்பத்திய வாழ்க்கையைப் பெற உதவும்.

உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவது முதல் உங்கள் மன அழுத்தங்களைப் புரிந்துகொள்வது வரை, உங்கள் பாலியல் ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரால் உங்களுக்கு உதவ முடியும்.

Views: - 480

1

0