பார்ப்பதற்கே கண்ணை கவரும் வகையில் இருக்கும் பீட்ரூட் வைட்டமின்கள் A மற்றும் C, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல் பொலிவான சருமத்தை இயற்கையான முறையில் பெறுவதற்கு ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் சருமத்தை டீடாக்ஸ் செய்து, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களான வயதான அறிகுறிகளை போக்குகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலமாக குண்டான மற்றும் அழகான சருமத்தை தருகிறது. மேலும் பீட்ரூட்டில் உள்ள இயற்கை பிக்மென்ட்கள் சருமத்தின் தொனியை சமமாக்கி உங்களுக்கு பொலிவான மற்றும் ஆரோக்கியமான அமைப்பை தருகிறது. எனவே தெளிவான சருமத்தை பெறுவதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதற்கான எளிமையான வழிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட், தயிர் மற்றும் தேன்
இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்வதற்கு முதலில் ஒரு பீட்ரூட்டை துருவி பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்திற்கு போஷாக்கு வழங்கி, ஈரப்பதத்தை சேர்க்கும்.
பீட்ரூட், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
2 டேபிள்ஸ்பூன் பீட்ரூட் பேஸ்ட்டுடன் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி காயும் வரை காத்திருக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ பளபளப்பான சருமத்தை பெறலாம்.
பீட்ரூட் மற்றும் கற்றாழை ஜெல்
போஷாக்கு நிறைந்த ஃபேஸ் மாக்கை தயார் செய்வதற்கு பீட்ரூட் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது சருமத்தில் உறிஞ்சப்படும் வரை காத்திருக்கவும். பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், கற்றாழையின் அமைதியூட்டும் விளைவோடு இணைந்து உங்கள் சருமத்தில் வேலை செய்யும்.
இதையும் படிக்கலாமே: தெருவே மணக்க வைக்கிற அளவுக்கு மீன் வறுவல் ரெசிபி!!!
பீட்ரூட், அரிசி மாவு, சர்க்கரை மற்றும் தயிர்
உங்களுடைய சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து, அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு ஒரு பீட்ரூட் பேஸ் ஸ்கிரப்பை தயார் செய்யலாம். இதற்கு 2 டேபிள் ஸ்பூன் துருவிய பீட்ரூட், அரிசி மாவு மற்றும் சர்க்கரை, தயிரை ஒரு கிண்ணத்தில் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகம் முழுவதும் தடவி வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யுங்கள். இது இறந்த சரும செல்களை அகற்றி பொலிவான சருமத்தை தரும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ உங்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.