இதெல்லாம் தெரியாம நீங்க அழகா ஆகணும்னு நினைச்சா எப்படி முடியும்?

Author: Dhivagar
26 July 2021, 5:30 pm
how to use fennel seeds for face pack
Quick Share

வீட்டிலேயே தயார் செய்த ஃபேஸ் பேக் தாங்க எதுவுமே பெஸ்ட்டா இருக்கும். ஏன்னா, கடையில வாங்குற பேஸ் பேக் மிக்ஸ்ல என்னதான் கலந்து இருக்குனு நமக்கு தெரியாது. அதனால சருமம் அழகா மாறுமா இல்லையானு நமக்கு கண்டிப்பா தெரியாது.

ஆனா, நம்ம வீட்டிலேயே, ஃபேஸ் பேக் ரெடி பண்ணிட்டா, நம்ம பயப்படாம அதை பயன்படுத்தலாம். அதுவும் இல்லாம, நம்ம வீட்டிலேயே இருக்க இயற்கையான ஆரோக்கியமான பொருட்களை வைத்து ஃபேஸ்பேக் செய்யுறதுனால இந்த பொருள் எல்லாம் நம் சருமத்திற்கு மிகவும் தேவையான பொழிவை கொடுக்கும். அதோடு, இதுல ரசாயனங்கள் எதுவும் இருக்காது. எனவே வீட்டிலேயே சில நொடிகளில் தயார் செய்யக்கூடிய ஒரு சிம்பிளான பேஸ் பேக் பற்றி தான் இந்த பதிவுல பார்க்கப்போறோம்.

ஒரு பொதுவான சமையலறை மூலப்பொருளான பெருஞ்சீரக விதைகள் கொண்டு தான் இந்த பேஸ் பேக்கை தயாரிக்க போகிறோம். இதன் நன்மைகளைப் பற்றி நாம் ஏற்கனவே அறிவோம். இந்த பெருஞ்சீரகம் ஒரு அற்புதமான செரிமான உணவு மட்டுமல்ல, பல அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. இதை வைத்து எப்படி ஃபேஸ்பேக் செய்யணும்னு கத்துக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பெருஞ்சீரகம் விதைகள்

தேன்- 1 தேக்கரண்டி

தயிர்- 1 தேக்கரண்டி

பேஸ் பேக் செய்முறை:

  • ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை கொர கொரப்பாக அரைக்கவும். இதனோடு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும்.
  • இப்போது இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்திலும் பிரஷ் பயன்படுத்தி தடவவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். இப்போது வெறுமனே உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். பிறகு உங்கள் தோலை உலர வைக்கவும்.

பெருஞ்சீரகம் விதைகளில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. கரடுமுரடான தூள் இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு எக்ஸ்ஃபோலியேட்டராக இருப்பதால் இந்த ஃபேஸ்பேக்கை நீங்கள் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை வெளியேற்ற இவை உதவியாக இருக்கும். இந்த பேக்கில் உள்ள தயிர் சருமத்திற்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும்.

அதே நேரத்தில் தேன் இதில் சேர்ப்பதால் பளபளப்பையும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் உதவியாக இருக்கும்.

இது மட்டுமில்லாமல், உங்கள் அழகை மேலும் மெருகூட்ட 2 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி, டோனராக பயன்படுத்த வேண்டும். இது நிறமியை சமன் செய்து உங்கள் சருமத்தை புதுப்பிக்கும் தன்மைக் கொண்டது.

Views: - 414

0

0