உங்க வீட்டுல எலுமிச்சைப்பழம் இருக்கா? அப்போ நீங்களும் பள பளன்னு ஜொலிக்கலாம்! எப்படி தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
7 August 2021, 10:28 am
How To Use Lemons for your Skin
Quick Share

எல்லோருக்குமே தங்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக நிறைய ஃபேஸ் கிரீம், ஃபேஸ் வாஷ் அது இதுன்னு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி தற்காலிக பலனை மட்டுமே அடைந்து கவலையோடு இருப்பார்கள். ஆனால், இயற்கையான மற்றும் செலவு குறைந்த ஆரோக்கியமான வழிகளைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதை நினைவுபடுத்தி ஒரு சின்ன டிப்ஸை சொல்லவே இந்த பதிவு.   

எல்லோர் வீட்டிலும் எலுமிச்சை கண்டிப்பாக இருக்கும். இல்லை என்றாலும் பக்கத்திலில் உள்ள கடைக்குச் சென்றாலே ஈசியாக வாங்கிக்கொள்ள முடியும். சரி இந்த எலுமிச்சை எப்படி நம்மை அழகாக வைத்துக்கொள்ள உதவும் தெரியுமா? எலுமிச்சையில் வைட்டமின் C மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் C ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சியை பராமரிக்கிறது. இது நமது சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இது கருமையான முழங்கால்கள் மற்றும் முழங்கைகளின் கருமையைப் போக்க மிக அற்புதமாக வேலை செய்யக்கூடியது.

இந்த எலுமிச்சை பாக்டீரியா எதிர்ப்புப்பண்பைக் கொண்டுள்ளது மற்றும் தொற்று மற்றும் முகப்பருவை தடுக்கும் ஆற்றல் இதனில் உண்டு. அவை நம் உடலையும் நச்சுத்தன்மை அற்றதாக்குகின்றன.

உங்கள் சருமத்திற்கு எலுமிச்சையை பயன்படுத்துவது எப்படி?

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சம்பழச்சாறு குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மற்றும் நமது சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

உங்கள் தோலில் எலுமிச்சைச்சாறு தடவ விரும்பினால், தயவுசெய்து ஆரம்பத்தில் பேட்ச் டெஸ்ட் செய்யவும். பேட்ச் டெஸ்ட் செய்து எதுவும் பாதிப்பு இல்லை என்றால், பின்வரும் இந்த செயல்முறையைச் செய்யவும்.  எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை 2:3 என்ற விகிதத்தில் கலந்து, பருத்தி பஞ்சைப் பயன்படுத்தி உங்கள் தோலில் மெதுவாகப் அப்ளைச் செய்யுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் உலர வைக்கவும்.

நீங்கள் வீட்டில் தயாரிக்கும் மற்ற ஃபேஸ் மாஸ்குகளிலும் கூட சில துளிகள் எலுமிச்சை சாற்றைச் சேரத்துப்பயன்படுத்தலாம்.

Views: - 984

0

0