ஆரஞ்சு பற்றி நிறைய விஷயம் கேள்விப்பட்டிருப்பீங்க… ஆனா இது உங்களுக்கு தெரியாது!

Author: Dhivagar
5 August 2021, 6:03 pm
How To Use Orange Juice for your Skin
Quick Share

கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, பம்பளிமாசு, கிச்சிலிபழம் என ஆரஞ்சு பழங்களில் பல வகைகள் உண்டு. இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C சத்துக்கள் நிரம்பி உள்ளது மற்றும் உடலில் நச்சுத்தன்மையை அகற்ற இது மிகவும் உதவியாக இருக்கும். 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்தால் சருமத்தை சுத்தப்படுத்தவும், சருமத்திற்கு புத்துணர்வை வழங்க உதவியாக இருக்கும். உங்கள் முகம் பருக்களால் கலையிழந்து காணப்படுகிறது என்றால் பருக்களை போக்கி அதை வராமல் கட்டுப்படுத்தவும் இந்த ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள சத்துக்கள் உதவியாக இருக்கும் மற்றும் சருமத்திற்கு ஒரு பிரகாசமான பொலிவை வழங்கும்.

உங்கள் முகம் மட்டுமல்ல மொத்த சருமமும் அழகாக மாற்ற ஆரஞ்சு ஜூஸை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ் உள்ளது. அதை நீங்கள் தொடர்ந்து ஃபாலோ செய்தாலே நீங்கள் அம்சமான அழகைப் பெறலாம்.

தினமும் காலையில் சில ஆரஞ்சு பழங்களை பிழிந்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது கருப்பு மிளகுத்தூள் சேர்த்து காலை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு முதுமை மந்தல், தோல் தடிமனாகாமை போன்ற அழகு நலன்களும், புண்கள் குணமடைதல், இதய நலம், புற்றுநோய் தடுப்பு போன்ற ஆரோக்கிய நலன்களும் கிடைக்கும்.

அடுத்து, நீங்கள் சிறிது ஆரஞ்சு தோலை எடுத்து சில துளிகள் ரோஸ் வாட்டருடன் அரைத்து மென்மையான பேஸ்ட் ஆக செய்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முகம் பளிச்சென்று எண்ணெய் வடிந்தது போல இல்லாமல் ப்ரெஷாக பொலிவான தோற்றம் கொடுக்கும்.

Views: - 519

2

0