தீபாவளி பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு சரியில்லையா… இதோ நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று மந்திரங்கள்!!!

20 November 2020, 8:04 pm
Quick Share

பண்டிகைகளில் பல சுவையான உணவுகள் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் இந்த உணவுகளை நாம் அனைவரும் விரும்புகிறோம். அது சுவையாக இருக்கிறது என்ற காரணத்தால் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு இதனால் உடலுக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என அஞ்சி கடுமையான டிடாக்ஸ் டையட்டை பின்பற்ற  முயற்சிக்கிறோம். இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு நிச்சயமாக உதவும். தேவையில்லாத வைத்தியங்களை செய்வதற்கு பதிலாக, சாப்பிடும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன:

* உங்கள் உணவை சாப்பிடும் போது உட்கார்ந்து கொள்ளுங்கள். 

* உங்கள் எல்லா புலன்களிலும் கவனம் செலுத்துங்கள், உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். 

* மெதுவாக சாப்பிடுங்கள். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு கடியையும் மகிழ்வித்து அனுபவிக்கவும். ஒவ்வொரு  உணவையும் உங்கள் வாயில் போட்டு மென்று கூழாக்கிய பின்னர் விழுங்கவும். இவைவே உங்கள் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தையும் நீக்கும் மூன்று அற்புதமான மந்திரங்கள். 

நம்மில் சிலர் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதனை சரி செய்து விடலாம் என நினைக்கிறோம். ஆனால் நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  உங்கள் வழக்கமான உடற்பயிற்சி, வழக்கமான உணவுக்குத் திரும்புங்கள்.   இதுவே உங்கள் ஆரோக்கியமான வழக்கத்தை திரும்பப் பெறுவதற்கான எளிய விதிமுறை. நீங்கள் வெறும் வயிற்றில் ஜிம்மிற்கு  செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியின் 20 நிமிடங்களுக்குள், ஒரு  ஆரோக்கியமான உணவை  சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் நன்கு நீரேற்றம் அடைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

Views: - 16

0

0