தாம்பத்திய உணர்வை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியமான ஹோம்மேட் ட்ரிங்க்ஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம்!

24 March 2020, 9:46 pm
health drinks updatenews360
Quick Share

இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த ஆரோக்கியமான ஹோம்மேட் ட்ரிங்க்ஸ் உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக நடக்க உதவுகிறது.
ஹோம்மேட் ட்ரிங்க்ஸ் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.

தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாத ஒன்றாகும் . தாம்பத்திய உணர்வை அதிகரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியமான ஒன்றாகும்.

ஆரோக்கியமற்ற உணவுமுறை, அதிகளவு மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை மற்றும் குறைவான தாம்பத்திய உணர்வோ ஒருவருக்கு திருப்தியான தாமத்தியத்தை ஏற்படுத்தாமல் இருக்கும். உங்களுடைய சமயலறையில் உள்ள சில பொருட்களை வைத்து ஹோம்மேட் ட்ரிங்க்ஸ் தயாரிக்க முடியும். அதைப்பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.

health drinks updatenews360

இதற்கு தேவையான பொருட்கள்:

வெந்தயப் பவுடர் – 1/2 டீஸ்பூன்
சாதிக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ – 3-5
கிராம்பு – 2
தண்ணீர் – 2 கப் அல்லது பசும் பால் – 1 கப்

  • பால் இயற்கையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
    இந்த பானத்தில் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சுத்தமான தேனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 2 கப் தண்ணீரிலோ அல்லது 1 கப் பசும்பாலிலோ மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கிக் கொள்ளலாம். பின்பு மிதமான சூட்டில் இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ்- ஐ தம்பதியினர் இரவு உறங்க போவதற்கு முன்பு குடிக்கலாம்.
  • இவை வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கையான முறையிலான
    ஹோம்மேட் ட்ரிங்க்ஸ் ஆகும். இவை உங்களுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும், தாம்பத்திய உணர்வையும் தர வல்லது.