உலக தாய்ப்பால் வாரம் | சீம்பால் குடிப்பதால் குழந்தைக்கு என்னென்ன சத்துக்கள் கிடைக்கும்? World Breastfeeding Week
Author: Hemalatha Ramkumar4 August 2021, 11:10 am
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பால் எவ்வளவு நல்லது என்பதை நாம் நம் வீடுகளிலேயே பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். எல்லா தாய்மார்களுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் பல நன்மைகள் கிடைக்கும். குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு ஆற்றலையும், மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும் கொடுக்க வல்லது. இன்னும் பல மகிமைகளைச் செய்ய வல்லது தாய்ப்பால்.
பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பால் சரியான விகிதத்தில் கொண்டுள்ளது. தாய்ப்பாலின் கலவை குழந்தையின் மாறும் தேவைகளுக்கு ஏற்ப, மிகவும் ஏற்ற உணவாக இருக்கும்.
குழந்தை பிறந்த முதல் நாளில், தாய்மார்களின் மார்பகங்களின் கொலஸ்ட்ரம் எனப்படும் மஞ்சள் நிற திரவ பதத்திலான சீம்பால் சுரக்கும். இது அதிக புரதச்சத்துடனும், சர்க்கரை குறைவாகவும், பிறந்த குழந்தைக்கு நன்மை பயக்கும் சேர்மங்களையும் கொண்டிருக்கும். இது உண்மையில் ஒரு இயற்கையான அற்புதமான உணவு மற்றும் மாற்று உணவுகளை இதன் தரத்திற்கு இணையாக தயார் செய்ய முடியாது.
முதல் நாளில் சுரக்கும் சீம்பால் பிறந்த குழந்தையின் முதிர்ச்சியற்ற செரிமான பாதையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். முதல் சில நாட்களுக்குப் பிறகு, குழந்தையின் வயிறு வளர்ச்சி அடையும்போது மார்பகங்களும் அதிக அளவு பால் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. அது குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
தாய்ப்பாலில் இல்லாத ஒரே விஷயம் என்றால் வைட்டமின் D மட்டுந்தான். அதை மட்டும் உணவுகள் மூலமாக எடுத்துக்கொள்ளலாம்.
தாய்ப்பாலின் மேலும் பல பண்புகளையும் குண நலன்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
0
0