உலக தேநீர் தினம்: டீ- தினம் குடிச்சா போதுமே! வேற எதுவும் வேண்டாமே!

21 May 2021, 12:32 pm
international tea day 2021
Quick Share

“டீ- தினம் குடிச்சா போதுமே! வேற எதுவும் வேண்டாமே” என்று  சொல்லுமளவுக்கு பேச்சுலர் பாய்ஸ், ட்ரைவர்ஸ், பணிக்குச் செல்வோர் என பலருக்கும் மிகவும் பிடித்த டீ-க்கான தினம் இந்த மே 21. நாளின் தொடக்கம் ஆனாலும் சரி, பணியின் தொடக்கம் ஆனாலும் சரி, ஒரு டீ சாப்பிட்டு ஸ்டார்ட் பண்ணலாமா ப்ரோ என்று கேட்கும் நண்பர் பட்டாளம் தான் நம்ம ஊரில் அதிகம். அதுவும் கார், லாரி போன்ற வாகனங்களை எல்லாம் ஓட்டும் டிரைவர்களுக்கு டீ தான் ஒரு புத்துணர்ச்சி பானம். எதை சாப்பிட்டாலும் கடைசியில் ஒரு டீ சாப்பிட்டால் தான் கடைசியில் திருப்தியே வரும்.

அப்படி நம்மிடையே அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த டீ பற்றிய  சில  தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தண்ணீருக்கு அடுத்து மக்கள் அதிகம் குடிக்கும் பானம் டீ தான்.

 உலக அளவில் 98 % பேர் பால் கலந்த டீ குடிக்கின்றனர்.

உலக அளவில் 30 % பேர் சர்க்கரையுடன் டீ குடிக்கின்றனர்.

பால் சர்க்கரை இல்லாமல் டீ குடித்தால் ரத்த ஓட்டம் சீராகும், செரிமான பிரச்சினை சரியாகும், மனஅழுத்தம் & தலைவலி குறையும். 

பால் மற்றும் சர்க்கரை கலந்த டீ தினசரி குடித்தால் டீஹைட்ரேஷன், ரத்தச்சோகை மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம். 

பால் டீ க்கு மாற்றாக லெமன் ஹனி டீ, வெந்தயம் டீ, சீரகம் சோம்பு டீ, சுக்கு மல்லி டீ, ஆவாரம் பூ டீ  போன்றவற்றையும் ட்ரை பண்ணலாம்!   

இதில் எந்த டீ வேண்டுமோ அதை பால் சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் போட்டு நான்றாக கொதிக்கவையுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டாலே போதுமானதாக  இருக்கும். மேற்சொன்ன டீ க்கான பொருட்கள் எல்லாம் லேசான கசப்புத்தன்மை கொண்டவை என்பதால் அதில் பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் டீ யை அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு தேன் கலந்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் அதையும் தவிர்த்துவிடுவது நல்லது.

அளவுக்கு  அதிகமான டீ  ஆபத்து. அளவோடு டீ குடிப்போம் ஆனந்தமாய் இருப்போம்!

Views: - 182

0

0