சீரகத்தை அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக இப்படி பயன்படுத்தினால் செம்ம நன்மைகள் இருக்கு!

15 June 2021, 9:07 pm
is it good to drink jeera water everyday
Quick Share

சாம்பார் முதல் ரசம் வரை சமையலில் சீரகம் முக்கிய பொருட்களில் ஒன்று என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இந்த சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் சீரகத்தைப் பொதுவாக நாம் அப்படியே தான் குழம்புகளில் போடுவோம். ஆனால், அதை சிறிது எண்ணெயில் போட்டு வறுத்து பொடி செய்து, சீரக பொடியாக சேர்த்துக்கொண்டால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன மாதிரியான நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.. 

சீரகப் பொடியுடன் சிறிது மிளகு தூள் சேர்த்து எண்ணெய்விட்டு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் ஆறி கைபொறுக்கும் சூட்டில் இருக்கும்போது உச்சந்தலையில் நன்கு படும்படி எண்ணெயைத் தேய்த்தால் கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

தூக்கமே வராமல் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் நல்ல மருந்து. ஒரு ஸ்பூன் சீரக பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலே போதும். இது தூக்க பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதை குடிப்பதன் மூலம் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

சீரகத்தில் வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. மேலும் இதை தினமும் உணவுகளில் சேர்த்து உட்கொண்டால் செரிமான அமைப்பு சீராக செயல்படும். இரவில் இரண்டு டீஸ்பூன் சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடிப்பதால் செரிமான பிரச்சினைகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருக்காது. இது உடலில் இருந்து நச்சுகளையும் நீக்குகிறது.

சீரகம் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவும். அதே போல திராட்சைப்பழத்தின் சாறுடன் கொஞ்சம் சீரக பொடியைச் சேர்த்து குடிப்பதன் மூலம் ஆரம்பகால உயர் இரத்த அழுத்த பிரச்சினை எல்லாம் குணமடையும்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் எடையைக் குறையும்.

ஒரு நாளைக்கு 300 முதல் 600 மி.கி சீரகம் மட்டுமே எடுத்துக்கொண்டாலே போதும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அதிகமாக சாப்பிடுவது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதே நேரத்தில் பெண்கள் அதிகம் சீரகம் சாப்பிட்டால் கரு கலையும் அளவுக்கு ஆபத்து உண்டு என சொல்கின்றனர். எனவே கருவுற்ற பெண்கள் அளவோடு சீரகம் சாப்பிட வேண்டும்.

Views: - 326

0

0