தினமும் பூண்டு சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

18 June 2021, 7:05 pm
is it good to take garlic everyday
Quick Share

பூண்டு என்பது இந்திய உணவு பொருட்களில் நாம் அன்றாடம் பயன்படுத்த்தும் ஒன்று. இது பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்திய உணவுகளில் காய்கறிகள், இறைச்சி, பருப்பு, சாம்பார் போன்ற உணவுகளை சமைக்கும்போது பூண்டு அதனுடன் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவில் சுவையை வழங்கும் கூடுதல் நறுமணம் வழங்கவும் பூண்டு மிகவும் முக்கியமான ஒன்று. உணவுகளில் சுவையைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், பூண்டு சேர்ப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. நீங்கள் தினமும் பூண்டு சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், மேலும் நோய்களின் தாக்கத்திலிருந்து நம் உடல் பாதுகாப்புடன் இருக்கும்.

3-4 துண்டுகளாக சில பூண்டு பற்களை நறுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் ஊற வையுங்கள். இப்போது பூண்டை நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.

இப்படி தேன் மற்றும் பூண்டு ஆகியவற்றை தினமும் காலையில் சாப்பிடுவதால் வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கையாகவே வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் இருக்கவும் உதவியாக இருக்கும். பூண்டு ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டது. பூண்டு உடல் எடையைக் குறைக்க உதவும். 

பூண்டு இயற்கையாகவே உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு தேன் இதய நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இது LDL எனும் கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. பூண்டு என்பது ஆண்டிபயாடிக் மற்றும் ஆண்டிஜென் போன்ற ஆண்டிபயாடிக் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவியாக இருப்பதோடு, சளி மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவியாக இருக்கும். 

பூண்டு சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால் இதுவே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு நாளும் அரை டீஸ்பூன் தேனுடன் சிறிது பூண்டு சேர்த்து சேரத்து சாப்பிடலாம்.

Views: - 255

0

0