மாலை நேரத்தில் முட்டை சாப்பிடுவது சரியா???

Author: Hemalatha Ramkumar
1 June 2023, 5:57 pm
Quick Share

முட்டை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன என்பது நமக்கு தெரியும். ஆனால் முட்டையை மாலை நேரத்தில் சாப்பிடும் போது கிடைக்கும் பலன்கள் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. முட்டையில் புரதம் உள்ளது. மேலும் அதன் ஒமேகா -3 மூளைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இன்று மாலையில் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

மாலையில் முட்டைகளை சாப்பிடுவதன் மிகப்பெரிய காரணம் அதிலுள்ள டிரிப்டோபான். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. டிரிப்டோபான் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் கோளாறுகளை குறைக்கிறது.

தூக்கத்தை மேம்படுத்துவதில் மெலடோனின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நரம்பு செல்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலை தூங்க சொல்லி சமிக்ஞை அனுப்புகிறது. மெலடோனின் என்பது
தூக்கமின்மையில் பெரும் பங்கு வகிக்கிறது.

வைட்டமின் டி நிறைந்த முட்டை எலும்புகள் மற்றும் மூளை செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. முட்டையை மாலை நேரத்தில் உண்பதால், நல்ல கொலஸ்ட்ரால் உடலில் சேமிக்கப்பட்டு, நாம் காலையில் சூரிய வெளிச்சத்துடன் தொடர்பு கொள்ளும்போது, உடலில் வைட்டமின் டி உற்பத்தி தொடங்குகிறது.

மாலை நேரத்தில் முட்டை சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. முட்டை செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. மேலும், முட்டையில் உள்ள புரதம் நம்மை நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போல வைத்திருக்கும். இதனால் நாம் இரவில் குறைந்த உணவை சாப்பிடுகிறோம். இது தவிர, இது தசைகளை பலப்படுத்துகிறது, ஹார்மோன் செயல்பாட்டை சமநிலையில் வைத்திருக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 300

0

0