யோகா பயிற்சியை வெறும் வயிற்றில் தான் மேற்கொள்ள வேண்டுமா…???

Author: Hemalatha Ramkumar
21 May 2022, 4:26 pm
Quick Share

ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருக்க யோகா இப்போது பலரின் ஒரு ஆப்ஷனாக உள்ளது. இது பல வழிகளில் உதவுகிறது. அது உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் தோரணையை மேம்படுத்துதல், அல்லது மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் அமைதியான உணர்வை வழங்குதல் போன்றவற்றை வழங்குகிறது. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகியவை உடற்பயிற்சியின் முக்கிய அங்கமாகும். அந்த வகையில், யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது

இதற்கான பதிலை இப்போது காணலாம். காலையில் உங்கள் உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் ஏதாவது சாப்பிடுவது முக்கியம். அந்த உணவு மிகவும் இலகுவாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய மிகவும் கனமாக இருக்கக்கூடாது.

நாம் நம் நாளைத் தொடங்குவதற்கு முன் நம் உடலுக்கு கொஞ்சம் எரிபொருளை ஊற்ற வேண்டும். ஒரு பேரிச்சம் பழம் அல்லது ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடும்போது நம் உடலில் வளர்சிதை மாற்றம் தொடங்கும்.

மறுபுறம், உங்கள் சுவாசத்தை மேம்படுத்த விரும்பினால் வெறும் வயிற்றில் யோகா செய்வதே சிறந்தது.
யோகாவை முதலில் காலையில் வெறும் வயிற்றில் செய்யும் போது, அது உள்ளிருந்து கட்டுப்படுத்தும் சுவாசத்தை சீர்குலைக்காது.

இப்படி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் இறுதியாக, உங்கள் உடல் உங்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது என்பதைக் கவனித்துப் புரிந்துகொள்வதும், ஒரு செயல் தங்களுக்கு பொருத்தமாக இருப்பதாகக் கருதுவதும் முக்கியம். வெறும் வயிற்றில் யோகா செய்வது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தால், அதைச் செய்யுங்கள். மறுபுறம், ஒரு சிறந்த தொடக்கத்தைப் பெற உங்களுக்கு ஏதாவது உணவு தேவை என உணர்ந்தால், உங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக அதைப் பின்பற்றவும்.

Views: - 562

0

0