உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை குறைப்பதற்கான சிம்பிள் வழிமுறைகள்?

Author: Hemalatha Ramkumar
20 August 2021, 5:59 pm
Is it Possible to Reduce bad cholestrol
Quick Share

உடல் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து அழகான கட்டமைப்பாக உடலமைப்பை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நீரேற்றமாக இருங்கள்

நீரேற்றத்துடன் இருப்பது எடை இழப்புக்கு மிகவும்  முக்கியமாகும். எடை இழப்பில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எடை இழப்பை அதிகரிக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கார்டியோ  பயிற்சி செய்யுங்கள்

உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் கார்டியோ அல்லது வேறு ஏதேனும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடையை உங்களால் குறைக்க முடியும். ஓட்டம், நடனம், நடைபயிற்சி, நீச்சல் அல்லது உங்கள் இதயத் துடிப்பை அதிகமாக வைத்திருக்கும் பல விதமான உடற்பயிற்சிகளை நீங்கள் அன்றாடம் செய்யலாம். வேகமான எடை இழப்புக்கு கார்டியோ மிகவும் சிறந்தது. இதை செய்வதன் மூலம் தானாகவே மெலிதான முகத்தோற்றம் கிடைக்கும்.

மது அருந்துவதைக் குறைக்கவும்

ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. ஆல்கஹால் தொடர்ந்து உட்கொள்வது முகத்தில் கொழுப்பை உருவாக்கக்கூடும். இதனால் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்

நாம் அனைவரும் சில நல்ல குக்கீகள், மிருதுவான சிப்ஸ் மற்றும் சுவையான பாஸ்தா போன்றவற்றை விரும்வி சாப்பிடுவோம். இருப்பினும், இதிலிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் கலோரிகள் உங்க உடல் எடையை அதிகரிக்கக்கூடும். எனவே அவை முகம் உட்பட உடலில் அதிகப்படியான எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு சேமிப்புக்கு வழிவகுக்கும். எனவே அவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

5. சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கவும்

சோடியம் உங்கள் உடலில் நீரை தங்கி விடச்செய்கிறது, இதன் விளைவாக முகம் உட்பட உடலில் வீக்கம் ஏற்படுகிறது. எனவே, அதிகப்படியான சோடியம் உபயோகத்தைத் தடுக்க ஊறுகாய் மற்றும் குறிப்பாக அதிக உப்பு உபயோகிக்கும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

6. போதுமான தூக்கம் வேண்டும்

தூக்கமின்மை மன அழுத்தம், எடை அதிகரிப்பு, அதிகரித்த பசி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எனவே ஆரோக்கியமான எடை வரம்பை அடைய நல்ல தரமான தூக்கம் மிக முக்கியமானது.

7. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகரிக்கவும்

அதிக நார்ச்சத்து உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலை நிறைவாக வைத்து பசியை குறைக்கிறது. எனவே கோதுமை உட்பட, பலவகை தானியங்கள், பச்சை இலை காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்க உதவும்.

Views: - 496

1

1