நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடலாமா?

22 June 2021, 8:54 am
Is ladyfinger Good For People With Diabetes
Quick Share

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகவும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நோயாகவும் உருவெடுத்துள்ளது. இது பல்வேறு உடல் அமைப்புகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். குளுக்கோஸ் அளவைப் பராமரிப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்புடைய அனைத்து சிக்கல்களையும் விலக்கவும் உணவு என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும் ஆண்டிடையாபெடிக் மற்றும் ஹைப்போகிளைசெமிக் விளைவைக் கொண்ட சிறந்த உணவுகளில் வெண்டைக்காய் மிக முக்கியமான ஒன்று. இந்த காய்கறி கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைத் தடுக்கும் ஆண்டிஹைபர்லிபிடெமிக் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, இதனால் இரத்தத்தில் கொழுப்பு அளவுகளை குறைகிறது.

வெண்டைக்காய் மற்றும் நீரிழிவு நோய்

உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வேலை செய்யும் வாழ்க்கை முறை ஆகியவை நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாக கூறப்படுகின்றன. சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும், இதனால் நீரிழிவு நோய் ஏற்படலாம். டைப் 2 நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்கள் பெரும்பாலும் உடல் பருமனாக இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.

உடல் பருமன் அல்லது ஹைப்பர்லிபிடெமியா பிரச்சினை குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது, பின்னர் இது பீட்டா-செல் செயல்பாட்டை இழக்க செய்கிறது மற்றும் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்படுகிறது, இதனால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

சிலருக்கு, பீட்டா-செல் செயலிழப்பு அல்லது நீரிழிவு நோய் அவர்களின் மரபணு சார்ந்த குடும்ப வரலாறு கூட காரணமாக இருக்கலாம். 

வெண்டைக்காயில் நார்ச்சத்துக்கள் உடன் பாலிசாக்கரைடுகள், பாலிபினால்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பென்கள் மற்றும் ஸ்டெரோல்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.

இந்த சேர்மங்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவு மற்றும் ஹைப்போலிபிடெமிக் விளைவுகளுக்கு பங்களிக்கின்றன, இதனால் லிப்பிட் அளவைக் குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வரக்கூடும்.

கணைய உயிரணு செயல்பாடுகளை மேம்படுத்தவும், மரபணு காரணிகளால் பீட்டா-செல் செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கவும் வெண்டைக்காய் உதவக்கூடும்.

நீரிழிவு நோயை நிர்வகிக்க வெண்டைக்காய் உதவுவதற்காக முக்கிய காரணங்கள்

1. குறைந்த கிளைசெமிக் குறியீடு

கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெண்டைக்காயின் கிளைசெமிக் குறியீட்டு 20 ஆக உள்ளது, அதாவது, இந்த காய்கறியின் நுகர்வு குளுக்கோஸ் அளவை மிக மெதுவாக உயர்த்துவதால் அவை குடலில் செரிமான ஆக அதிக நேரம் எடுக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் பசியான வேளைகளில் வெண்டைக்காய் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் இதனால் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

2. சிறுநீரக நோயை எதிர்த்துப் போராடுகிறது

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைக்கு நீரிழிவு நோய் தான் ஒரு முக்கிய ஆபத்து காரணி. அதிக சர்க்கரை அளவு சிறுநீரகங்களின் நரம்புகளை சேதப்படுத்தும் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். குளுக்கோஸ் அளவைப் பராமரிக்கவும், சிறுநீரகங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் தடுக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது.

3. கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது

கார்போஹைட்ரேட் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் கரையக்கூடிய நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய், செரிமான செயல்முறையை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவுகளில் கார்ப்ஸின் தாக்கத்தை குறைக்கிறது. வெண்டைக்காய் சாப்பிட்டால் நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பசியைத் தடுக்கிறது.

Views: - 235

0

0