ஆரோக்கியம்

ஜப்பான் மக்கள் ஸ்லிம்மா இருக்கிறதுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் ஒளிஞ்சிருக்குதா…???

ஜப்பானிய மக்கள் என்றாலே நம்முடைய ஞாபகத்துக்கு முதலில் வருவது அவர்களுடைய கட்டுக்கோப்பான உடலும், அழகான தோலும் தான். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள். அன்றாட வாழ்க்கையை அவர்கள் முழுமையான மற்றும் ஒழுக்கம் நிறைந்த அணுகுமுறையோடு அணுகுவது இந்த ஃபிட்னஸ் கிடைப்பதற்கு காரணமாக அமைகிறது. ஜப்பானியர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது அரிதான ஒரு விஷயம். அவர்களுடைய இந்த கவர்ச்சியூட்டும் வெளிப்புற தோற்றம் அவர்களது மரபணுக்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல. இதற்கு முக்கிய காரணம் வேலை, ஓய்வு மற்றும் விளையாட்டுக்கு அவர்கள் கொடுக்கும் சமநிலை.

இதன் விளைவாக அவர்கள் நல்ல கட்டுக்கோப்பான உடலோடு ஆரோக்கியமாக இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கையானது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஊக்கமாக அமைகிறது. அந்த வகையில் ஜப்பானியர்களின் ஃபிட்னஸ்க்கு காரணமாக இருக்கும் ரகசியங்கள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவு அளவு கட்டுப்பாடு

உணவு அளவு என்பது ஜப்பானிய கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு பழக்கமாக அமைகிறது. இதன் காரணமாகவே அவர்கள் ஆரோக்கியமான உடல் எடையை கொண்டு இருக்கின்றனர். கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சரியான அளவு சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவதையும் அவர்கள் தவிர்த்து விடுகின்றனர்.

பொறுமையாக சாப்பிடுவது 

ஜப்பானில் பொறுமையாக சாப்பிடுவது என்பது அவர்களுடைய கலாச்சாரத்தில் வேரூன்று இருக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு கடியையும் ரசித்து ருசித்து மென்று கூழாக்கி விழுங்குவதால் உணவு நன்கு ஜீரணமாகி, உடல் எடை அதிகரிப்பது குறைந்து, மேலும் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மைதாவிற்கு பதிலா இந்த மாதிரி ஹெல்தி ஆப்ஷன் கூட இருக்கு… தெரிஞ்சுக்கோங்க!!!

ஆரோக்கியமான பானங்கள் 

தினமும் கிரீன் டீ குடிப்பதை ஜப்பானியர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். நாள் முழுவதும் கிரீன் டீ பருகுவதால் அவர்களுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைத்து மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு, கொழுப்பு எரிக்கும் செயல்முறை அதிகமாகிறது. இதனால் உடலில் வீக்கம் ஏற்படாமல் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஃபிரஷான மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகள் 

ஜப்பானிய மக்கள் எப்பொழுதும் ஃபிரெஷான மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரோட்டீன்கள் மற்றும் முழு தானியங்கள் அவர்களுடைய உணவில் கட்டாயமாக இருக்கும். இவற்றில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு உதவுகிறது.

உடல் செயல்பாடு 

ஜப்பானில் உடல் செயல்பாடு என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. நடப்பது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

20 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

21 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

21 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

21 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

21 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

22 hours ago

This website uses cookies.