PCOS பிரச்சனையைக் குணப்படுத்த உதவும் இயற்கை மருத்துவம்!

20 July 2021, 2:48 pm
Kalachikai benefits for PCOS
Quick Share

பிசிஓஎஸ் பிரச்சினையால் பல பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர். அதற்கான ஒரு தீர்வு தான் கழற்சிக்காய் என்ற ஒரு வித மூலிகை. இதற்கு அற்புதமான மருத்துவ குணங்கள் உண்டு. முக்கியமாக தமிழ்நாட்டில் இது PCOS, ஒழுங்கற்ற மாதவிடாய், புற்றுநோய், உடல் எடை குறைப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் ஒரு  பிரபலமான மருத்துவ மூலிகை. கழற்சிக்காய் ஒரு வகையான புதர் செடி. இது 15 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதனை இந்தியா மற்றும் இலங்கை முழுவதிலும் காணலாம். 

இது ஒரு முட்செடி என்ற காரணத்தால் இதனை வயல் வரப்புகளில் பாதுகாப்பிற்காக வளர்ப்பர். தமிழில் இதனை சூட்டு கொட்டை என்று கூறுவார்கள். சிறு வயதில் இந்த கொட்டைகளை தேய்த்து விளையாடிய நியாபகம் உங்களில் பலருக்கு இருக்கும். இப்போது  கழற்சிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். 

ஆன்டி ஆஸ்துமா தன்மை கொண்ட இந்த காய் ஆஸ்துமா நோய்க்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

கழற்சிக்காய் பொடியை தேனோடு கலந்து எடுத்து கொள்வதன் மூலம் ஆஸ்துமா குறையும் என்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

பாரம்பரியமாக காட்டுவாசி மக்கள் கழற்சிக்காயை நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆன்டி டயாபெட்டிக் தன்மை கொண்ட இந்த காயானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை குறைக்கச உதவுகிறது. 

அதே போல காய்ச்சல் வராமல் தடுக்கவும் கழற்சிக்காயை காட்டுவாசிகள் உபயோகிப்பர். காய்ச்சல், உடல் வலி, உள் வீக்கம் ஆகியவற்றை சரி செய்யும் தன்மை கழற்சிக்காய்க்கு உண்டு. மலேரியா காய்ச்சலுக்கு கூட கழற்சிக்காய் மருந்தாக அமைகிறது. 

பாலி சிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் என்று சொல்லப்படும் PCOS பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றிற்கு கழற்சிக்காய் ஒரு சிறந்த மருந்து. மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவுகிறது. இதற்கு கழற்சிக்காய் பொடியோடு மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆன்டி டியூமர் தன்மை கொண்ட கழற்சிக்காய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். கார்சினோமா உள்ள எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கழற்சிக்காய் பொடி கொடுக்கப்பட்ட போது புற்றுநோய் கட்டிகளின் அளவு குறைந்தது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ எடைக்கு 300 mg அளவு கொடுக்கும் போது எந்த வித பக்க விளைவும் ஏற்படவில்லை.

Views: - 321

0

0

Leave a Reply