வெண்டைக்காயை இதற்கு கூட உதவுமா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2021, 11:02 am
Quick Share

ஆரோக்கியமே செல்வம் என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நம் உடலின் அனைத்து பாகங்களிலும் நாம் எத்தனை முறை கவனம் செலுத்துகிறோம்? ஆமாம், நிச்சயமாக, நம் உடலமைப்பை வடிவத்தில் வைத்திருக்க அல்லது வலிமையை அடைய ஒரு சில முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் நம் உடலின் பல உறுப்புகளை புறக்கணித்து விடுகிறோம். அத்தகைய ஒரு உறுப்பு தான் நம் கண்கள்.

நாம் எல்லா நேரத்திலும் அவற்றை அதிகமாக பயன்படுத்துகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் தொழில்நுட்பத்தின் வலையில் சிக்கி உள்ளோம். உண்மையில், உங்கள் கண்பார்வையை புறக்கணிப்பது நீண்ட காலத்திற்கு அழிவை ஏற்படுத்தும்.

நிச்சயமாக, திரை நேரத்தை குறைப்பது அவசியமானது. ஆனால் உங்கள் உணவும் உங்களுக்கு உதவக்கூடும். கண்பார்வை என்ற உடனே நம் நினைவிற்கு வருவது கேரட் தான். ஆனால் வெண்டைக்காயும் உங்கள் கண்பார்வையை மேம்படுத்த உங்களுக்கு உதவும். இந்த காய்கறி ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். மேலும் இது உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு அற்புதங்களைச் செய்யும். இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வெண்டைக்காயின் நன்மைகள்:
உங்களுக்குப் பிடித்த வெண்டைக்காயில் வைட்டமின் C நிரம்பியுள்ளது. அதாவது உங்கள் கண் ஆரோக்கியம் நிச்சயம் கவனிக்கப்படும். இதில் ஜீக்ஸாந்தின் மற்றும் லுடீன் உள்ளது. இவை இரண்டும் பீட்டா கரோட்டினின் சக்திவாய்ந்த ஆதாரங்கள். வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். அவை பொதுவான கண் பிரச்சினைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.

உங்கள் கண்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த எளிய காய்கறி செரிமான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது, இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கிறது, மேலும் கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது.

வெண்டைக்காயின் வழக்கமான நுகர்வு உங்கள் பார்வை கூர்மையாகவும் வலுவாகவும் இருக்க உதவும் என்பது பலருக்குத் தெரியாது. மேலும், கண்புரை போன்ற பிரச்சினைகளையும் இது தடுக்கிறது.

Views: - 319

0

0