சிறு வயதில் விளையாட்டாக பயன்படுத்திய ஸ்கிப்பிங் கயிற்றில் இப்பேர்ப்பட்ட நன்மைகளா…???

Author: Hemalatha Ramkumar
24 September 2022, 10:11 am
Quick Share

நாம் சிறு வயதில் ஸ்கிப்பிங் கயிற்றை வைத்து விளையாடிய நாட்கள் உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் இந்த கயிறு ஒரு விளையாட்டு பொருள் என்பதைத் தாண்டி ஒரு அற்புதமான உடற்பயிற்சியாக செயல்படுகிறது. இது பல பெரிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இப்போது ஸ்கிப்பிங் கயிறு பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஸ்கிப்பிங் கயிற்றில் குதிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
*இது ஒரு கார்டியோ வொர்க்அவுட்டாகும்..இது உடலின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

*ஸ்கிப்பிங் கயிற்றில் குதிப்பது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியாகும். மேலும் இது உங்கள் இதயத்தை வலிமையாக்கி இதய நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

* இது உங்கள் மனதை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் கவனம் செலுத்தும் திறனைக் கூட்டுகிறது.

*மேலும் உங்கள் சகிப்புத்தன்மையை அதிகரித்து, விரைவில் சோர்வடைவதைத் தடுகிறது.

* கவலை அல்லது மனச்சோர்வு இருந்தாலும், இதன் பலன் பெறலாம்.

*ஸ்கிப்பிங் கயிற்றில் குதிப்பதால் எலும்புகள் வலுவடையும்.

*ஸ்கிப்பிங் செய்யும் போது அதிக வியர்வையை உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. இதனால் சருமத்தில் இயற்கையான பொலிவு ஏற்படும்.

* நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஸ்கிப்பிங் செய்யத் தொடங்குங்கள். இது உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி தொப்பையை குறைக்கும்.

Views: - 479

0

0