நமது அன்றாட உணவில் பெருங்காயம் சேர்க்க இந்த காரணங்கள் போதாதா என்ன???

Author: Hemalatha Ramkumar
5 June 2023, 12:46 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

பெருங்காயம் என்பது பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு மசாலா பொருள். இது அதன் வலுவான வாசனை மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிக்கிறது. அது மட்டும் அல்லாமல், பெருங்காயத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வலி மற்றும் தொடர்ச்சியான அதிக இரத்தப்போக்கு காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் ஒரு மோசமான அனுபவமாக இருக்கும். எனினும், பெருங்காயம் மாதவிடாய் அசௌகரியம் மற்றும் வயிற்றுப் பகுதி மற்றும் முதுகில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவி புரிகிறது.

பெருங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கிருமிகளை சுவாச மண்டலத்திற்கு வெளியேற்ற உதவுகின்றன.
வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா சிகிச்சையிலும் உதவுகிறது. இது மார்பு நெரிசல் மற்றும் சளி வெளியேற்றத்திற்கு உதவுகிறது.

பெருங்காயம் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இது நாள்பட்ட ஒற்றைத் தலைவலி மற்றும் மன அழுத்தம் தொடர்பான தலைவலியைப் போக்க உதவுகிறது.

பெருங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு இயற்கையான பிளட் தின்னராக (Blood thinner) கருதப்படுகிறது. இதில் கூமரின் என்ற வேதிப்பொருளால் நிரம்பியுள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்தம் உறைவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.

பெருங்காயத்தில் ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால், இது உலர்ந்த மற்றும் வலுவிழந்து காணப்படும் முடியை சமாளிக்க உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பெருங்காயம் நன்மை பயக்கும். ஆனால் அவர்கள் மிகக் குறைந்த அளவு அல்லது ஒரு சிட்டிகை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், பெருங்காயத்தை அதிக அளவு உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 272

0

0