கம கமக்கும் எண்ணெய் கொண்டு செய்யப்படும் அரோமாதெரபியின் பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
2 February 2023, 10:04 am
Quick Share

அரோமாதெரபி உங்களுக்கு நிதானத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். இது அத்தியாவசிய எண்ணெய் சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையானது உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்துகிறது. இந்த எண்ணெய்களில் சில அழகு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் எண்ணெயை முகர்ந்து பார்க்கலாம் அல்லது மசாஜ் மூலம் அவற்றை தடவலாம் அல்லது குளிக்கும் நீரில் சேர்க்கலாம்.

இந்த சிகிச்சையானது அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சுவாசம் வழியாக உள்ளிழுக்கப்படும் போது, அரோமாதெரபி எண்ணெய் மூளையின் உணர்ச்சி மையத்திற்கு பயணிக்கிறது. இதனால், அவை நம்மை நன்றாக உணரவைக்கின்றன.

அரோமாதெரபி அதன் பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது வலியை சமாளிக்க உதவுகிறது. இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் கிளர்ச்சியைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிக்கும். மேலும் மூட்டு வலிகளையும் ஆற்றும். அவை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸையும் எதிர்த்துப் போராடும். இது செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இது கீமோதெரபியால் ஏற்பட்ட பக்க விளைவுகளைத் தணிக்கும். அவை பிரசவத்தின் போது ஏற்படும் அசௌகரியத்தை எளிதாக்குவதாகவும் அறியப்படுகிறது.

அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றிலும் இது உதவுகின்றது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அத்தியாவசிய எண்ணெய்கள் குணப்படுத்தக்கூடிய பல உடல்நிலை சிக்கல்கள் உள்ளன. அரோமாதெரபி மூலம் தூக்கமின்மை மற்றும் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கலாம். மனச்சோர்வு மற்றும் மாதவிடாய் நிறுத்தமும் குணமாகும். வீக்கம் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இது விறைப்புத்தன்மை மற்றும் கீல்வாதத்திற்கும் உதவக்கூடும். மேலும், இது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

Views: - 266

0

0