தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நம் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
7 November 2021, 4:11 pm
Quick Share

நல்ல உணவுப் பழக்கம் என்று வரும் போதெல்லாம், ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். மேலும் பழச்சாறுகள் குடிப்பதற்கு எதிராக நிபுணர்கள் அடிக்கடி ஆலோசனை கூறுகிறார்கள். இருப்பினும், ஒரு புதிய ஆய்வின்படி, பீட்ரூட் சாறு குடிப்பது, சிறந்த இரத்த நாளங்கள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட வாய்வழி பாக்டீரியாக்களின் கலவையை ஊக்குவிக்கிறது.

ஆய்வு பற்றி
பீட்ரூட், கீரை மற்றும் செலரி போன்ற பிற உணவுகளில் கனிம நைட்ரேட் அதிகமாக உள்ளது. ஆய்வின்படி, பல வாய்வழி பாக்டீரியாக்கள் நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுவதில் பங்கு வகிக்கின்றன. இது இரத்தத்தை சீராக்க உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, வயதானவர்கள் குறைவான நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்கிறார்கள். இது மோசமான வாஸ்குலர் அதாவது இரத்த நாளங்கள் மற்றும் அறிவாற்றல் அதாவது மூளை ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வாய்வழி நுண்ணுயிரியின் நீண்ட கால பராமரிப்பு, வயதானவுடன் வரும் தீங்கு விளைவிக்கும் வாஸ்குலர் மற்றும் அறிவாற்றல் மாற்றங்களை தாமதப்படுத்த உதவும்.

பீட்ரூட் சாறு எப்படி தயாரிப்பது?
2 பீட்ரூட்கள்
1 துண்டு இஞ்சி,

இவற்றை தோல் நீக்கி நறுக்கி ஒரு பிளெண்டரில் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும். அதிக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பரிமாறும் முன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும்.

Views: - 521

2

1