கோடை காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழங்களாக மாம்பழமும், தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் பழமாக முலாம்பழம்
உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கோடை காலம் வந்துவிட்டது. இந்த காலங்களில் அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் முலாம்பழமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கோடை காலத்தில் இந்த பழத்தை நாம் உண்ணும் போது நமக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும்.
இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் வைட்டமின்கள் பி1,பி6, கே, காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்ச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
◆எடையைக் குறைக்க உதவுகிறது:
நேரத்திற்கு உணவு உண்ணாமை, நேரமின்மை காரணமாக சத்தற்ற உணவு ஆகிய பழக்க வழக்கங்ளுக்கு இப்போது நாம் பழகி வருகிறோம். இது எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த முலாம்பழம் பழத்தை சாப்பிடுவதால் எடை குறைப்புக்கு நல்ல பலன் தருகிறது. இந்த பழத்தில் மிக குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.
◆கண் பார்வைக்கு:
கண்ணுக்கு மிகச்சிறந்த ஆரோக்கியம் தரும் மருந்தாக இந்த முலாம்பழம் உள்ளது. இவற்றில் விட்டமின் ஏ , பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால். இது கண் பார்வையை மேம்படுத்தவும், கண் புரை பிரச்சனைகளை வராமல் தடுக்கவும் உதவுகிறது. ஆகவே, இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவது மிகவும் சாலச்சிறந்தது.
◆தூக்கமின்மையை போக்குகிறது:
தூக்கமின்மை என்பது இந்த காலக்கட்டத்தில் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிக நேரம் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சிகளில் நமது நேரத்தை செலவிடுவது ஒரு காரணம் என்றாலும், இயற்கையாகவே இந்த தூக்கமின்மை பிரச்சினையை போக்கும் சக்தி இந்த முலாம்பழம் பழத்திற்கு உண்டு.இது நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்தி சீரான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.
◆நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது:
வைட்டமின் சி யில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை இந்த பழத்தில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. இதனால் நமது உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது .
முலாம்பழம் பழத்தை நாம் சாலட்டாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை, மற்றும் இதயம், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
நாம் சாப்பிடும் உணவில் முலாம்பழத்தை சேர்த்து கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது. இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிப்பதால் இந்த காலக்கட்டத்தில் இதை எடுத்துக் கொள்வது சிறந்த முறையில் பயன் அளிக்கும்.
செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.…
மீண்டும் மீண்டும் கோலிவுட்டின் ராக்ஸ்டார் என்று புகழப்படுபவர் அனிருத். GenZ தலைமுறையினரின் Pulse-ஐ பிடித்துக்கொண்ட அனிருத் தற்போது தமிழ் சினிமாவின்…
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில்…
கம்மி பட்ஜெட், மிகப்பெரிய வெற்றி கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்…
ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடததிய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கடந்த ஏப்ரல் 22ல்…
கோவை வடகோவை - பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை…
This website uses cookies.