எலும்புகளை வலுப்பெற செய்யும் பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்!!!

Author: Hemalatha Ramkumar
3 February 2023, 4:30 pm
Quick Share

பன்னீரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. இது எலும்புகளை பராமரிக்க நன்கு உதவுகிறது.

கால்சியம் சத்துக்கள் இதயம், உடல் தசைகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நன்கு உதவுகிறது. நம் உடலின் செரிமான அமைப்பு நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்கிறது.

செரிமான அமைப்பின் எளிதான செயல்பாட்டிற்கு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் அவசியம். பன்னீரில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. அவை செரிமானத்திற்கு உதவுகின்றன. எனவே மலத்தை எளிதாக வெளியேற்றும்.

பன்னீர் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும். வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் பன்னீரில் உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலம் நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் தொற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.

இது தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. பன்னீரில் ஒமேகா-3 உள்ளது, இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிக நல்லது. இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. பன்னீர் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளது, இது மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கூடிய சில இரசாயனங்கள் (ஸ்பிங்கோலிப்பிட்கள்) இதில் உள்ளன. பன்னீர் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

நமது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக புரதம் உள்ளது. மேலும் கொழுப்பு அமிலங்கள் சிறிய சங்கிலி போன்ற வடிவில் இருப்பதால் நம் உடலில் கொழுப்பு சேர்வதை கணிசமாக குறைக்கிறது.

இவை எளிதில் ஜீரணமாகக்கூடியது. பனீரில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன. இது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. பன்னீர் முடியை வலுவாகவும் அழகாகவும் மாற்றுகிறது.

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் பால் பொருட்களிலிருந்து தங்களைத் தள்ளியே வைத்துக் கொள்கிறார்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய மெக்னீசியம் இருப்பதால் பன்னீர் மட்டும் விதிவிலக்காகும். பன்னீர் இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கிறது. இது குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளில் ஒன்றாகும்.

Views: - 93

0

0