ஊட்டச்சத்து களஞ்சியமாக திகழும் முலாம்பழ கொட்டைகள்!!!

Author: Hemalatha Ramkumar
14 May 2023, 11:00 am
Quick Share

நாம் பொதுவாக எந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலும் அதன் கொட்டைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் பழங்களை காட்டிலும் அதன் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை அறிந்திருக்கவில்லை. கோடைகால பழமான முலாம்பழத்தில் காணப்படும் கொட்டைகளில் என்னென்ன மருத்துவ குணங்கள் காணப்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புரதம் என்பது நமது தசைகளை வளர்க்க மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். முலாம் பழத்தின் கொட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது தசைகளை வளர்க்கவும் திசுக்களை சரி செய்யவும் உதவுகிறது.

முலாம்பழத்தின் கொட்டைகளில் உணவு நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.

கல்லீரலானது மெழுகு போன்ற ஒரு கொழுப்பை உருவாக்குகிறது. இது ரத்த கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. உடலில் ஒரு சில முக்கியமான செயல்பாடுகளை செய்வதற்கு கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும் அது அதிகப்படியாக இருப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். முலாம் பழக்கொட்டைகள் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

வீக்கம் என்பது நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. அந்த வகையில் முலம் பழத்தில் காணப்படும் கொட்டைகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு இருப்பது நமது உடலை நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து காக்க உதவுகிறது. முலாம் பழக்கொட்டைகளில் காணப்படும் அதிகப்படியான வைட்டமின் சி சத்து ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பை பராமரிக்க உதவுகிறது. எனவே இனி முலாம் பழம் வாங்கி சாப்பிடும் பொழுது அதன் கொட்டைகளை தூக்கி எறிந்து விடாமல் முறையாக பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 283

0

0