பப்பாளி விதைகள்: பெண்களுக்கான ஊட்டச்சத்து களஞ்சியம்!!!

Author: Hemalatha Ramkumar
23 May 2023, 4:30 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

பப்பாளி பழம் மற்றும் காய்களில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருப்பது போலவே அதன் விதைகளிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் உலர்ந்த பப்பாளி விதைகளில் சுமார் 500 கலோரிகளுக்கும் அதிகமான ஆற்றல் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்பு அமிலங்கள், புரதச் சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகளும் அடங்கி உள்ளது.

பப்பாளி விதைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது நன்றாக உணர வைத்து அரைத்து பொடியாக செய்து தினமும் பயன்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

பப்பாளி விதையில் அதிக அளவில் நார்ச்சத்து அடங்கி உள்ளது. இது நமது செரிமான உறுப்புகளை சீராக வைத்துக் கொள்கிறது. பப்பாளி விதையில் உள்ள கார்பைன் நம்முடைய குடலில் உற்பத்தியாகும் குடல் புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளை அளிக்கிறது. நம் உடலில் உள்ள செல்கள் கெட்ட கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கவும், உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்றவும் உதவுகின்றன.

இதனால் கெட்ட LDL கொழுப்புகள் உடலில் சேராமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பப்பாளி விதையில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம்முடைய குடலின் செயல்பாடுகள் சீராகி, குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றப்பட்டு, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

பப்பாளி விதைகளில் ஐசோதியோசயனேட் மற்றும் பாலிஃபீனால்கள் அதிக அளவில் உள்ளன. இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் தடுக்கிறது. பப்பாளி விதைகளில் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள் மற்றும் சபோனின்கள் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

பப்பாளி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் உடலில் ஏற்படும் சேதத்தை தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பப்பாளி விதைகளில் ஒலிக் அமிலம் என்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளும் அதிகமாக இருக்கின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் அதிக கொழுப்புகள் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பப்பாளி விதைகளில் குறிப்பிட்ட அளவு பீட்டா கரோட்டின் என்ற வேதிப்பொருள் அடங்கி உள்ளது. இது பெண்களில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குகிறது. இது மாதவிடாயைத் தூண்டவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் தசை பிடிப்புகளை குறைக்கவும் உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 276

0

0