லேசர் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நீங்கள் செய்ய வேண்டியது, செய்ய கூடாதது இவை தான்!!!

12 September 2020, 3:00 pm
Quick Share

லேசர் சிகிச்சை மூலம் முடி அகற்றுதல், மற்ற அறுவை சிகிச்சை முறைகளைப் போலவே, ஏராளமான செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பற்றி  புரிந்துகொண்ட பின்னரே செய்யப்பட வேண்டும்.  இதனால் சிகிச்சை சரியாக மாறும். பல்வேறு முடி அகற்றுதல் விருப்பங்கள் உள்ளன – வேக்ஸிங் முதல் ஷேவிங் மற்றும் ட்வீஸிங்  வரை பல வழிகள் உள்ளன. இதில் லேசர் முடி அகற்றுதல் நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது. 

லேசர் முடி அகற்றுதலைத் தேர்வுசெய்ய நீங்கள் திட்டமிட்டால், அத்தகைய சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் ஒருவர்  மனதில் கொள்ள வேண்டிய   சில அடிப்படை விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாதவை உள்ளன. அவற்றை இங்கே காணலாம். 

சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்:

* குறைந்தது இரண்டு-மூன்று வாரங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டிய பகுதியை த்ரெட்டிங், பிளக்கிங் அல்லது வேக்ஸிங் செய்ய வேண்டாம்.

* உங்கள் லேசர் அமர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முகப்பரு, வயதான எதிர்ப்பு மற்றும் நிறமி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

* அமர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீச்சல் மற்றும் புற ஊதா கதிர்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கவும்.

அமர்வுக்குப் பிறகு:

* சருமத்தை ஆற்றுவதற்கு கலமைன் லோஷன் அல்லது கற்றாழை ஜெல் தடவவும்.

* ஒவ்வொரு மூன்று நான்கு மணி நேரத்திற்கும் ஒரு முறை சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்.

* 48 மணி நேரத்திற்குப் பிறகு கிரீம்கள் மற்றும் சீரம் பயன்படுத்த தொடங்கலாம்.

* மூன்றாம் நாள் முதல் AHA / BHA லோஷன் போன்ற லேசான எக்ஸ்ஃபோலியண்ட்டைப் பயன்படுத்துங்கள்.

* 12 மணி நேரம் கழித்து ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். 

இந்த லேசர் சிகிச்சை மூலமாக முடி வளர்ச்சியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் என  பெரும்பாலான மக்கள் தெரிவிக்கையில், ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள் ஒருவரின் முடி வளர்ச்சியை  விரைவாக வளர வைக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நபருக்கு நபர் முடிவுகள் மாறுபடலாம்.

Views: - 10

0

0