உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குள் நீங்கள் நுழையும் பொழுது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது பல்வேறு விதத்தில் உங்களுக்கு உதவும். எப்பொழுதும் ஆரோக்கியமான விஷயங்களை தேர்வு செய்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. தினமும் உடற்பயிற்சி செய்வது அல்லது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது போன்ற சவாலான காரியமாக இருக்கலாம். ஆனால் அதனை செய்வதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நிச்சயமாக இதனை நீங்கள் பின்பற்றுவதற்கான தரமான ஒரு செயலாக அமையும். அந்த வகையில் உங்களுடைய வாழ்க்கையை எப்பொழுதும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதற்கு உதவும் ஒரு அற்புதமான டெய்லி ஹாக் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த ஹேக் மிகவும் எளிமையானது. எளிமையை நீங்கள் ஆடம்பரமாக ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருந்தாலே அனைத்து விஷயத்தையும் நீங்கள் பிராக்டிக்கலாக பார்ப்பதற்கு ஆரம்பித்து விடுவீர்கள். இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எளிமையான விஷயங்களே மிக அழகான சாதனைகளாக அமையும். ஒரு சாதாரண வொர்க் அவுட் செய்த பிறகு நீங்கள் எவ்வளவு நல்ல மனநிலையோடு இருப்பீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். எனவே ஒவ்வொரு முறை வொர்க்அவுட் செய்த பிறகும் நிறுத்தி அந்த உணர்வை அனுபவியுங்கள்.
இதையும் படிக்கலாமே: BP அதிகமாகிட்டா ரொம்ப பிரச்சினையா போய்விடும்… அத கன்ட்ரோல் பண்ண ஈசி டிப்ஸ் இதோ!!!
அந்த சமயத்தில் உங்களுடைய ஆற்றல் அளவு கடந்ததாக இருக்கும். இரவில் நன்றாக தூங்குவீர்கள். மேலும் காலை எழும்பொழுது முழு ஆற்றலோடு விழிப்பீர்கள். எனவே உடற்பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் நிறுத்தி, அதனுடைய பலனை பிரதிபலிக்க மறக்காதீர்கள். அந்த உணர்வோடு நீங்கள் காதலில் விழ வேண்டும். இரவு நேரத்தில் நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்வீர்கள், எவ்வளவு எனர்ஜெட்டிக்காக இருப்பீர்கள் மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வீர்கள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இயற்கையோடு நேரத்தை செலவு செய்யுங்கள். சூரிய உதயத்தை பார்த்தீர்கள், சூரியன் மறைவதையும் பார்த்தீர்கள். இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு நன்றி சொல்லுங்கள். எனினும் “நான் உடற்பயிற்சி செய்வதில்லை” என்று சொல்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தங்களால் இயன்ற உடற்பயிற்சியை செய்வது நல்லது.
உடற்பயிற்சி செய்வது நம்முடைய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளும். இதற்காக நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் இயன்ற நடைப்பயிற்சி, ஜாகிங் போன்றவற்றை செய்யலாம். அதுவும் பிடிக்காவிட்டால் நடனம் நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இதையும்…
பகல்காம் தாக்குதலில் சுற்றுலாபயணிகள் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போரை தொடுக்க முன்வந்தது. இதையும் படியுங்க:…
ஆப்ரேசன் சிந்தூர் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் தருணத்திற்காக இந்திய…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா, ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். தனது தந்தை…
This website uses cookies.