பொதுவாக கீரைகளில் எப்போதும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது என கேள்விப்பட்டு இருக்கிறோம். கீரை வகைகளில் அதிக சத்துக்களை கொண்ட கீரை முருங்கைக்கீரை ஆகும். இவற்றில் நம் உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அதிகமாக உள்ளன.
முருங்கைக் கீரையில் அதிகமாக இரும்புச்சத்து மற்றும் புரதம் அடங்கியுள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் அடங்கியுள்ள முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.
முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் நமது உடலில் உள்ள தசைகளை வலுப்பெற செய்கிறது. இவற்றில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் துணை புரிகிறது.
வாரத்தில் குறைந்தது இருமுறை முருங்கைக்கீரை உண்பதால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி கழிவுகளுடன் வெளியேற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது. இரத்த சோகையை போக்குவதற்கு மிகவும் சிறந்த மருந்து முருங்கைக்கீரை ஆகும்.
முருங்கைக் கீரையில் வைட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. இவை ஞாபக சக்தியை தூண்டி நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. எனவே அல்சைமர் போன்ற ஞாபகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு முருங்கைக்கீரை சூப் குடித்து வருபவர்களுக்கு ஆஸ்துமா, மார்புச்சளி, சைனஸ் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கை, கால் வசதி மற்றும் மூட்டு வலி போன்றவை குணமாகிறது.
முருங்கைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது மற்றும் இளநரையை போக்குகிறது.
முருங்கைக் கீரையை பொரியல் செய்து அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்ணும் போது பித்தத்தால் உண்டாகக்கூடிய மயக்கம், மலச்சிக்கல், கண் மங்கல் போன்றவை விரைவில் குணமடைகிறது.
முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூ போன்றவை நரம்புத்தளர்ச்சியை போக்குவதில் மிகவும் சிறந்தது. நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் கை கால் நடுக்கம், உடல் சோர்வு மற்றும் ஆண்மை குறைவு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.