பாரம்பரிய நெல்: எலும்பு முறிவை மருந்தில்லாமல் குணமாக்கும் மாயாஜால அறுபதாங்குறுவை அரிசி!!!

26 January 2021, 10:32 pm
Quick Share

இன்று நாம் அறுபதாங்குறுவை என்ற பாரம்பரிய அரிசி வகையைப் பற்றி பார்க்க இருக்கிறோம். இது ஒரு அற்புதமான நெல் வகையாகும். டெல்டா மாவட்டங்களில் இயற்கை விவசாயிகளால் இது அதிகப்படியாக விளைவிக்கப்படுகிறது. பாரம்பரிய அரிசி என்றாலே அது எக்கச்சக்க நன்மைகளுடன் வருகிறது.

அந்த வகையில் அறுபதாங்குறுவையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் B1 மற்றும் வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த வகை அரிசியில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. 

எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், மற்றும் பல எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவித்து வருபவர்கள் இந்த அறுபதாங்குறுவை அரிசியை தினமும் சாப்பிட்டு வர விரைவில் குணமடையலாம். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இதனை சாப்பிட வேண்டும். மூட்டு வலி இருப்பவர்களும் இந்த அரிசியை எடுத்து வர நல்ல பலன் கிடைக்கும். 

எலும்பு சார்ந்த பிரச்சினைகள் தவிர இந்த அரிசி இரத்த சுத்திகரிப்பாளராகவும் செயல்படுகிறது. அது மட்டும் இல்லாமல்  இரத்தத்தில் உள்ள பிளேட்டிலெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அறுபதாங்குறுவையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் இதனை தாராளமாக சாப்பிடலாம். 

நார்ச்சத்து நிறைந்த அறுபதாங்குறுவை செரிமான மண்டலத்தை வலுவடைய செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிற்று வலி போன்ற செரிமான கோளாறுகளில் இருந்து உடலை காக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பவர்கள் முதுகு தண்டு வலியில் இருந்து விடுபட அறுபதாங்குறுவை அரிசியை கஞ்சியாக வைத்து பருகினால் விரைவில் குணமாகும். 

அறுபதாங்குறுவை என்பது சிவப்பு நிற அரிசி. இதனை கொண்டு பல விதமான உணவுகளை சமைக்கலாம். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது இந்த அரிசி. இதனை ஒரு சத்து மாவு போல செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அனைத்து பாரம்பரிய அரிசியைப் போலவே அறுபதாங்குறுவையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே இத்தகைய நன்மைகள் வாய்ந்த பாரம்பரிய அரிசியை நீங்களும் உண்டு உங்கள் குடும்பத்தாருக்கும் கொடுத்து வர நீங்களும் பலனடையலாம், அதோடு நாடும் நலம் பெறும்.

Views: - 0

0

0