இந்த மாதிரி சாப்பிட்டா கண்டிப்பா உங்களுக்கு வைட்டமின் D குறைபாடு வரவே வராது!!!

Author: Hemalatha Ramkumar
9 June 2023, 10:49 am
Quick Share

வைட்டமின் டி குறைபாடு இன்று இந்தியாவில் அதிக அளவில் பலரை பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. சூரிய கதிர்களுக்கு நம்மை வெளிப்படுத்தாததன் காரணமாகவே இந்த குறைபாடு ஏற்படுகிறது. தற்போது பெரும்பாலான நபர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால், வெளியே செல்வதற்கான தேவை குறைகிறது. இதுவும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான ஒரு காரணமாகும்.

ஆனால் வைட்டமின் டி சத்து நமது உடலில் குறைவாக இருக்கும் பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நம் உடலை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. அது மட்டுமல்லாமல் வைட்டமின் டி குறைபாடு எலும்பு இழப்பிற்கும் வழிவகுக்கும்.

நீங்கள் வெயிலில் அதிக நேரம் செலவு செய்யாத ஒரு நபராக இருந்தால், வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உங்கள் உணவுகளில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆகவே இந்த பதிவில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும் உணவு பழக்கத்தை பற்றி பார்க்கலாம்.

காலை உணவு: உங்கள் நாளை ஒரு சில பாதாம் பருப்புகள் சேர்க்கப்பட்ட ஓட்ஸுடன் துவங்குங்கள். மேலும் அதில் வைட்டமின் டி சத்தின் சிறந்த ஆதாரமாக உள்ள ஒரு டீஸ்பூன் கார்ட் லிவர் ஆயில் பயன்படுத்த மறக்காதீர்கள்.

மதிய உணவு: மதிய உணவில் கீரைகள், அடர்ந்த இலை காய்கறிகள் கொண்ட சாலட்டை சாப்பிடலாம். அதனுடன் கிரில் செய்யப்பட்ட வஞ்சரம் மீன் வைட்டமின் டி சத்தை உங்களுக்கு வழங்கும்.

ஸ்நாக்ஸ்: உணவுகளுக்கு இடையே வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு போன்ற ஆரோக்கியமான பழங்களை ஸ்நாக்ஸாக நீங்கள் சாப்பிடலாம்.

இரவு உணவு: இரவில் காளான், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை ஃப்ரை செய்து சாப்பிடலாம். இதில் புரதத்திற்காக டோஃபு சேர்க்கவும். மேலும் பொரித்த வஞ்சரம் மீனுடன் உங்கள் நாளை முடித்துக் கொள்ளுங்கள்.

லேட் நைட் ஸ்நாக்ஸ்:
ஒருவேளை நீண்ட நேரம் இரவில் வேலை பார்க்க வேண்டியிருந்தால், அந்த சமயத்தில் பசிக்கும் பொழுது முந்திரி பருப்பு அல்லது வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை ஒரு கையளவு சாப்பிடவும். இதனுடன் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை வழங்கும்.

இந்த எளிமையான உணவு முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் உடலின் வைட்டமின் டி தேவையை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 275

0

0