என்னதான் சுவை கசப்பாக இருந்தாலும், பாகற்காய் நன்மை எல்லாம் இனிமை தான்! பாகற்காய் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
9 August 2021, 2:07 pm
medicinal benefits of bitter gourd
Quick Share

பெரும்பாலும் பாகற்காய் கசக்கும் என்பதால், அதை  நிறைய பேர் விரும்புவதில்லை. ஆனால், இந்த பாகற்காயைச் சாப்பிடுவதால் என்னென்ன அற்புதமெல்லாம் நடக்கும் என்று தெரிந்தால் கண்டிப்பாக இதை மிஸ் செய்யவே மாட்டீர்கள். அட அப்படி என்னதாங்க இதுல நல்லது இருக்குனு கேக்குறவங்களுக்கு:

பாகற்காயின் நன்மைகள்:

  • ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளைக் குணப்படுத்த பாகற்காய் மிகவும் உதவியாக இருக்கும். 
  • அடுத்து கல்லீரல் பிரச்சனைகளை குணப்படுத்த இது ஒரு மகாமருந்து என்று சொல்லலாம். தினமும் ஒரு கிளாஸ் கசப்பான பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் கல்லீரல் பிரச்சினையில் இருந்து விடுபடும் மாற்றத்தை நீங்களே உணர முடியும்.
  • சிறந்த நோய் எதிர்பாற்றல் கிடைக்க தினமும் பாகற்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி தொற்றுகள் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கும்.
  • இந்த கசப்பான பாகற்காய் உட்கொள்வது உங்களுக்கு ஆரோக்கிய நலன்களைத் தருவது மட்டுமல்லாமல் முகப்பரு, அழுக்குகள் மற்றும் ஆழமான தோல் நோய்களிலிருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும். 
  • சிரங்கு, அரிப்பு, சொரியாசிஸ், படர்தாமரை மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் ஒரு மாமருந்து இந்த பாகற்காய்.
  • பாகற்காயின் மிக முக்கியமான குணநலன் என்றால் இது நீரிழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும். டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த இந்த பாகற்காய் மிகவும் உதவியாக இருக்கும். இது நீண்ட காலமாக இந்தியாவின் பண்டைய கால மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 
  • டைப் 2 நீரிழிவு நோய் என்பது உடல் செல்களினால் இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்ச முடியாததாலும் இன்சுலின் எதிர்ப்பின் காரணமாகவும் ஏற்படுகிறது. ஆனால் பாகற்காய் கைனேஸை செயல்படுத்துவதன் காரணமாக சர்க்கரை உறிஞ்சுதல் அதிகரிக்கிறது, எனவே, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டுவர இது உதவுகிறது.
  • மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்க உதவும் பாகற்காய். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், கசப்பான செரிமானத்திற்கு உதவுகிறது. பாகற்காயை உணவுபட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உணவு செரிமானம் செய்யப்பட்டு, கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். இது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது
  • அது மட்டுமில்லாமல் இந்த பாகற்காயை நம் வழக்கமான உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டால், உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு இயற்கையாக ஆற்றல் கொடுக்கவும், இரத்த சுத்திகரிப்புக்கும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும், வயதாகும் விளைவை தாமாதப்படுத்தவும், காயங்களை குணப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

Views: - 733

0

0