டூ இன் ஒன் பலன் தரும் சப்ஜா விதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
20 March 2023, 12:56 pm
Quick Share

ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது, ​​நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் முதல் விஷயம் எடை. அது ஒன்று மட்டுமே முக்கியம் அல்ல என்றாலும் இது நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

இன்று நாம் ஊட்டச்சத்து நிறைந்த சப்ஜா விதைகள் பற்றி தான் பார்க்க போகிறோம்! உலகெங்கிலும் உள்ள உணவியல் நிபுணர்கள் உடல் எடையைக் குறைக்க பரிந்துரைக்கும் ஒரு உணவுப்பொருளாக சப்ஜா விதைகள் உள்ளன.

இதனை நிரூபிக்கும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் உள்ளன. இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து போதுமானது. இது இயற்கையாகவே உங்களை நீண்ட நேரத்திற்கு முழுதாக வைத்திருக்கும். இது இறுதியில் சீரான இடைவெளியில் உணவு உண்பதைத் தடுக்கும். இந்த விதைகளில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த அமிலம் கொழுப்பைத் தூண்டுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

இது தவிர, சப்ஜா விதைகளில் கலோரிகள் மிகக் குறைவாகவும், அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கூடுதலாக, இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எடை மேலாண்மைக்கு அத்தியாவசியமான கூறுகள். அதாவது சப்ஜா விதையில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், கே மற்றும் ஈ உள்ளது.

எடை இழப்புக்கு, 1-2 டீஸ்பூன் துளசி விதைகளை எடுத்து, அவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது செரிமான நொதிகளை வெளியிடுகின்றன. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. அதோடு சப்ஜா விதைகள் உடல் சூட்டை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 242

0

0