இரத்தத்தை தூய்மையாக்கும் இளநீரின் மருத்துவ பயன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
31 May 2023, 1:15 pm
Quick Share

இயற்கையாக கிடைக்கக்கூடிய குளிர்பானங்களில், உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய, எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத குளிர்பானங்களில் முதன்மையானது இளநீர் ஆகும். கோடைகாலங்களில் மட்டுமே சிலர் இளநீரை அருந்துகின்றனர். ஆனால் இளநீரானது அனைத்து பருவ காலங்களிலும் அருந்தக்கூடிய ஒன்றாகும்.

இளநீரில் பச்சை இளநீர், செவ்விளநீர், இளஞ்சிவப்பு இளநீர் போன்ற வகைகள் உள்ளன. அனைத்து இளநீரும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. இளநீரில் அதிகப்படியான நீர் சத்துக்களுடன் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன.

இளநீர் பருகுவதால் உடலில் இருக்கக்கூடிய வெப்பம் குறைக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதைத் தவிர வேறு பல நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. இளநீர் பருவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளில் ஒரு சிலவற்றை காண்போம். நூறு மில்லி லிட்டர் இளநீரில் தோராயமாக 200 மில்லி கிராம் பொட்டாசியம், 100 மில்லி கிராம் சோடியம் உள்ளது.

உடலில் உள்ள ரத்தத்தின் சுத்திகரிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் உற்பத்திக்கும் தேவைப்படும் முக்கியமான சத்து பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகும்.
இது ரத்தத்தை சுத்திகரித்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தக் குழாய்களின் சுருக்கம் நீக்கப்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இளநீரில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நாம் உண்ணும் உணவுகளில் இருக்கக்கூடிய குளோரின் மெல்ல மெல்ல ஒன்றாக சேர்ந்து சிறுநீரகங்களில் கற்களை உருவாக்குகிறது. இளநீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் சிறிது சிறிதாக கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

இளநீரில் இருக்கக்கூடிய நார் சத்துக்கள் நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.
உடல் உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவை எளிதில் குணப்படுத்தப்படுகிறது.
கோடைகாலங்களில் ஏற்படும் சரும வறட்சி, பருக்கள், கட்டிகள், கண் எரிச்சல், உடல் சோர்வு, நீரிழிப்பினால் ஏற்படும் நீர் சுருக்கு மற்றும் சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை சரி செய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 308

0

0