சங்குப் பூ மருத்துவம்: காய்ச்சல் முதல் குடல் புழுக்கள் வரை…!!!

Author: Hemalatha Ramkumar
29 May 2023, 1:40 pm
Quick Share

பொதுவாக சங்குப்பூ என்று அழைக்கக்கூடிய கார்கட்டான் பூ தெரு ஓரங்களில் கிடைக்கக்கூடியதாகும்.ஏ இந்த பூவின் இலைகள் பூக்கள் விதைகள் வேர் ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும். சங்குப்பூ வெண்மை நிற மலர்கள் மற்றும் ஊதா நிறமலர்கள் என இரண்டு நிறங்களில் காணப்படுகிறது. இவை இரண்டுமே மருத்துவ குணங்கள் கொண்டதாகும் இவற்றில் அடுக்கு மலர்கள் உடைய தாவர வகைகளும் காணப்படுகிறது.

இந்த பூவின் வேரை 50 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக பொடியாக அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து சுமார் அரை மணி நேரம் கொதிக்க வைக்கவும். இப்போது ஒரு லிட்டர் தண்ணீர் அரை லிட்டராக குறைந்தவுடன் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என ஐந்து முறை குடித்து வந்தால் உடலில் இருக்கும் காய்ச்சல் உடனடியாக குணமடையும்.

இந்த பூவின் சாற்றை 20 கிராம் அளவிற்கு எடுத்து காய்ச்சி குளிர்விக்கப்பட்ட பசும்பாலில் கலந்து தினமும் அருந்தி வர நாள்பட்ட நோய்கள் குணமடைகிறது. இந்த பூவின் சாற்றை தேய்த்து குளிப்பதால் தோலில் உள்ள சருமத்தில் உள்ள கிருமிகள் நோக்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

சங்குப்பூவின் இலைகளை நல்லெண்ணெய் அல்லது தென்னை மரக்குடி எண்ணெயில் நன்கு வதக்கி மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளவும். இதனை அடிபடுவதால் ஏற்படும் ரத்தக்கட்டு, வீக்கம் மற்றும் கட்டி இருக்கும் இடத்தில் வைத்து கட்டும்போது வலி நிவாரணியாகவும் வீக்கத்தை மற்றும் ரத்தக்கட்டை போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.

சங்குப்பூவின் சாற்றை சிறிதளவு நீருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறு குழந்தைகளின் வயிற்றில் இருக்கக்கூடிய குடல் புழுக்கள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. சங்கு பூவை நன்றாக நிழலில் உலர வைத்து பொடியாக்கி டீ யில் கலந்து குடித்து வருவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 402

0

0