மருதாணி: அழகும் மருத்துவ குணங்களும் ஒரே இடத்தில்!!!

Author: Hemalatha Ramkumar
11 May 2022, 10:43 am
Quick Share

மருதாணி இலை என்றாலே பலரும் நினைப்பது, மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால், மருதாணி இலைகளில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.

மருதாணி இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:
*பெண்கள்:
பெண்களுக்கு மருதாணி என்றாலே மிகவும் பிடிக்கும். மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவார்கள். பெண்கள் மருதாணியை கைகளுக்கு வைப்பதால் மன அழுத்தம் குறையும், நகச்சுத்து வராமல் தடுக்கும், கைகள் மென்மையாக இருக்கும். இப்படி பெண்கள் விரும்பி வைக்கும் மருதாணியில் பல நன்மைகள் உள்ளன.

*தலைவலி:
தலைவலி என்றாலே யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. தலைவலி வந்தால் வேலையில் எந்தவித கவனமும் இல்லாமல் போய்விடும். தலைவலி ஏற்படும் போது மருதாணி இலைகளை அரைத்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி பிரச்சனை தீரும்.

*தலைமுடிக்கு:
மருதாணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து காயவைத்து, சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி தனியாக ஒரு பாட்டிலில் ‌ஊற்றி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், நாளடைவில் இளநரை மறையும், உடல் சூடு குறையும், கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

*உடலில் ஏற்பட்ட வீக்கம் குறையும்:
உடலில் ஏதாவது ஒரு இடத்தில் சுளுக்கு ஏற்பட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அல்லது உடலுள்ள மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் , மருதாணி இலைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெயை வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் வீக்கம் விரைவில் வற்றும்.

*தூக்கமின்மை:
தூக்கமின்மை என்பது இந்த காலக்கட்டத்தில் பலருக்கு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால், அவர்களின் உடல், மன ஆற்றலை குறைக்கிறது . இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்றால் மருதாணி இலைகளில் இருந்து கிடைக்கும் மருதாணி எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து நரம்புகள் குளிர்ச்சியாகி தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

பயன்கள்:
*மருதாணி இலை கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை அழிக்க கூடியது. மருதாணி இலைகள் சிறந்த கிருமி நாசினி என்றே கூறலாம்.

*மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ளவதால், நகசுத்தி வராமல் தடுக்கும்.

* உடலில் எங்காவது புண்கள் , வீக்கம் இருந்தால் மருதாணி இலைகளை பயன்படுத்தினால் விரைவில் ஆறிவிடும்.

*மருதாணி இலைகளை பயன்படுத்துவதால் உடல்சூடு, மன அழுத்தம் , தூக்கமின்மை, உடல் உஷ்ணம் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.

இவ்வளவு மருத்துவ குணங்களும் , பயன்களும், நன்மைகளும் நிறைந்த அற்புத மூலிகையான மருதாணி அழகோடு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இதை சரியாக பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபட்டு உடல்நலத்தை சிறப்பாக ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.

Views: - 1480

0

0