சுருக்கங்கள் நீங்கி இயற்கையாக பொலிவான சரும அழகைப் பெறுவது எப்படி?

2 June 2021, 6:54 pm
natural anti aging tips for face
Quick Share

வயதாவதற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தான். சருமத்தின் நெகிழ்ச்சி இழப்பு காரணமாக கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படும். இன்று சந்தையில் இதை போக்குவதாக கூறும் பல செயற்கை தயாரிப்புகள் உள்ளன, அவை உங்கள் சுருக்கங்களை மறைத்து மீண்டும் இளமையாக மாற்றுவதாக தோன்றலாம். ஆனால், அனைத்துமே அப்படி இளமைதோற்றத்தை மீட்டுக்கொடுக்குமே என்பது கேள்விக்குறியே என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்த தயாரிப்புகளில் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உள்ளன, அவை நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். சரி செயற்கை ரசாயன தயாரிப்புகளை விட்டுவிடுவோம். இயற்கையாகவே நீங்கள் அழகான தோற்றத்தை பெற முடியும் என்றால் அது மகிழ்ச்சியான தகவல் தானே? ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும். அது எப்படி சாத்தியம். அதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

முட்டையின் வெள்ளைக்கரு:

natural anti aging tips for face

இது ஒரு இயற்கை மருந்தென்று சொல்லலாம். இது சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் தளர்வான சருமத்தை இறுக்கமாக்குகிறது. சரும சுருக்கத்திற்கு இது மிகவும் நல்லது. முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக கலக்கி பின்னர் அதை உங்கள் சுருக்கம் இருக்கும் முகம் மற்றும் கழுத்தின்  சருமத்தில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிடுங்கள். இதை தொடர்ந்து செய்து வர நீங்கள் இளமை தோற்றத்தைப் பெற முடியும்.

கற்றாழை:

natural anti aging tips for face

இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும் மற்றும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை மங்கச் செய்யும். நீங்கள் இந்த கற்றாழை ஜெல்லை கடைகளிலும் கூட வாங்கலாம் அல்லது உங்கள் வீட்டிலேயே செடி இருந்தால் அதில் இருந்தே கற்றாழைச் சோறு என்று சொல்லக்கூடிய ஜெல்லை பிரித்தெடுக்கலாம். முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:

இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. சிறந்த பொலிவான சருமத்தைப் பெற நீங்கள் இதை இரவில் தடவிக்கொண்டு காலையில் கழுவி விடலாம்.

ரோஸ்மேரி எண்ணெய்:

natural anti aging tips for face

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ஃபைப்ரோபிளாஸ்ட்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் தோல் நெகிழ்ச்சியை அதிகரிக்கும். இது ஒரு சிறந்த வயோதிக எதிர்ப்பு பொருளாகும்.

வெள்ளரிக்காய்:

natural anti aging tips for face

இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும். அதே நேரத்தில், இது உங்கள் சருமத்தை புதுப்பித்து புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் இளமையாக தோற்றமளிக்க செய்கிறது. சிறிது வெள்ளரிக்காயை அரைத்து உங்கள் முகத்தில் அரை மணி நேரம் தடவ வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

பொறுப்பாகாமை: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்கள் மட்டுமே, அவை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அல்லது உணவியல் நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Views: - 220

0

0