ஆரோக்கியமான உணவு என்பது உடல் எடையை குறைப்பதில் ஒரு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. அதே போல், உங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் உடல் எடை குறைப்பு பயணத்தில் உங்களுக்கு உதவலாம் அல்லது தடையாகவும் இருக்கலாம். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்டதற்கு பிறகு நீங்கள் ஈடுபடக்கூடிய ஒரு சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் உங்களுடைய உடல் எடை குறைப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இரவு சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது அல்லது டிவியின் முன்பு உட்கார்ந்து கொள்வது போன்ற உட்கார்ந்த வாழ்க்கை முறை மெட்டபாலிசத்தை குறைத்து, கலோரிகள் எரிக்கப்படுவதை குறைக்கும்.
மேலும் லேட்நைட் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அல்லது மன அழுத்தம் போன்றவை உங்களுடைய உடலில் கூடுதல் கலோரிகளை சேர்த்து, செரிமானத்திற்கு தடையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் போன்கள் அல்லது டேப்லெட்டுகளை நேரம் காலம் தெரியாமல் பயன்படுத்துவது இரவு நேரத்தில் ஒரு சில உணவுகளை சாப்பிட தூண்டி, சுய கட்டுப்பாட்டை குறைக்கும். எனவே அந்த வகையில் உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணத்தை விரைவுப்படுத்துவதற்கு இரவு உணவு சாப்பிட்ட பிறகு நீங்கள் ஈடுபடக்கூடிய சில செயல்பாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறிய நடைபயிற்சி
டின்னருக்கு பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் சிறிய நடைபயிற்சியில் ஈடுபடுவது உடல் எடை குறைப்பதை விரைவாக்கும். இது மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை எரித்து, செரிமானத்திற்கு உதவுவதன் மூலமாக உடல் எடையை குறைக்கும். இந்த லேசான உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, ஓய்வு உணர்வை அளித்து, உடலை தூங்குவதற்கு தயார் செய்யும்.
லேசான நீட்சி பயிற்சிகள்
டின்னருக்கு பிறகு நீட்சி பயிற்சிகள் செய்வது உங்களுடைய உடலில் நெகிழ்த்தன்மையை அதிகரித்து, தசை டென்ஷனை குறைத்து, மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும். இந்த குறைந்த தாக்கம் கொண்ட செயல்பாடு செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும்.
மூலிகை டீ
இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஹெர்பல் டீ குடிப்பது உடல் எடை குறைப்பது மற்றும் அஜீரணத்தை போக்கும் .கஃபைன் இல்லாத புதினா, சாமந்திப்பூ மற்றும் இஞ்சி டீ குடிப்பது செரிமானத்தை ஊக்குவித்து, வீக்கத்தை குறைத்து, வயிற்றை ஆற்றும். அது மட்டுமல்லாமல் காஃபைன் நிறைந்த பானங்களை இரவு நேரத்தில் பருகாதீர்கள். இது தூக்கத்தின் தரத்தை குறைக்கலாம்.
இதையும் படிச்சு பாருங்க: ஹேர் கலரிங் செய்யும் போது இந்த விஷயங்களை தப்பித்தவறி கூட மறந்துடாதீங்க!!!
தரமான தூக்கம்
தரமான தூக்கம் என்பது உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் அவசியமான ஒரு செயல்பாடு. தூக்கத்தின் பொழுது உங்கள் உடலானது தன்னை ரிப்பேர் செய்து கொள்ளும், பசி ஹார்மோன்களை சீரமைக்கும் மற்றும் மெட்டபாலிசத்தை தூண்டும். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்வதன் மூலமாக நீங்கள் ஆரோக்கியமான உடல் எடை இழப்பை பெறலாம்.
யோகா
டின்னருக்கு பிறகு யோகா செய்வது நெகிழ்வு தன்மையை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை தூண்டுவதன் மூலமாக உடல் எடையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் யோகா மன அழுத்தத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி பசி ஹார்மோன்களை சீராக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.