நிபா வைரஸ் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

By: Dhivagar
7 September 2021, 5:21 pm
Nipah virus decoded Symptoms, precautions and treatment
Quick Share

கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பலியான சம்பவம் பலரையும் பீதியடையச் செய்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் சில பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிபா வைரஸ் என்பது 1990 ஆம் ஆண்டில் மலேசியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனால் அதிக இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது இந்தியாவில் முதன்முதலில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் 2001 இல் 45 பேர் இறந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் 2018 இல் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 40-80% ஆகும், அதே நேரத்தில் இதன் அடைகாக்கும் காலம் இரண்டு வாரங்கள் ஆகும்.

நிபா வைரஸ் என்றால் என்ன?

நிபா வைரஸ் (NiV) ஒரு விலங்கியல் வைரஸ் ஆகும், இது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது, மேலும் இது அசுத்தமான உணவு மூலமாகவும் அல்லது மக்களிடையேயும் நேரடியாக பரவக்கூடியது மற்றும் வெளவால்களாலும் ஏற்படுகிறது. 

இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இது காற்றுவழியே பரவக்கூடிய தொற்று அல்ல. ஆனால் வெளவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்தானது.

நிபா வைரஸின் அறிகுறிகள்

  • நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோவிட் தொற்றால் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். 
  • நிபா வைரஸின் பொதுவான அறிகுறிகளாக இருமல், தொண்டை புண், தலைசுற்றல், மயக்கம், தசை வலி, சோர்வு மற்றும் மூளை வீக்கம், தலைவலி, கழுத்து இறுக்கம், வெளிச்சத்திற்கு உணர்திறன், மன குழப்பம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
  •  ஒருவர் சுயநினைவில்லாமல் போனால், அது இறுதியில் மரணத்திற்கும் கூட வழிவகுக்கக்கூடும்.

சிகிச்சை

  • இந்த வைரஸுக்கு திட்டவட்டமான சிகிச்சை என்று எதுவும் இல்லை. மேற்கண்ட அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன், இந்த வைரஸின் நோயறிதலை உறுதிசெய்து, ஆதரவான கவனிப்பில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். 
  • மூளையழற்சி மற்றும் பிற அறிகுறிகளைக் கவனிப்பதற்காக உங்களுக்கு மருத்துவரால் மருந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • நீங்கள் மருந்து ஏதும் எடுத்துக்கொள்ளலாம் அஜாக்கிரதையாக இருந்தால், உங்கள் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

பின்பற்றவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்

  • அசுத்தமான பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 
  • பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். 
  • இந்த வைரஸுக்கு வெற்றிகரமாக சிகிச்சை பெற உதவும் தடுப்பூசி எதுவும் இல்லை. வெளவால்கள், பன்றிகளுடன் நேரடி தொடர்புக் கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். 
  • அறிகுறிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தாலோ உங்கள் மருத்துவரை அணுகவும்.

Views: - 246

1

0

Leave a Reply