ருசிக்காக மட்டும் அல்ல… தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட இத்தனை காரணங்கள் இருக்கு உங்களுக்கு!!!

20 April 2021, 8:57 pm
Quick Share

கோடைகாலமானது பல பருவகால சிக்கல்களைக் கொண்டுவருகிறது.  ஆனால் இந்த பருவத்தில் தான் சுவை மிகுந்த  பழங்களும் கிடைக்கிறது.  அவற்றில் ஒன்று மாம்பழம்! இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம். மேலும் மாம்பழத்தைக் கொண்டு ஜாம், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவை செய்தும் சாப்பிடலாம். இந்த கோடைக்கால பழத்தை நாம் அனைவரும் ஏன் கட்டாயமாக எடுக்க  வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

மாம்பழங்கள் கொழுப்பு நிறைந்தவை மற்றும் இதில் கலோரிகள் அதிகம் உள்ளது என நம்பப்படுகிறது. இருப்பினும் உங்கள் கோடைகாலத்தை மாம்பழங்களுடன் அனுபவிக்க வேண்டிய பல நல்ல காரணங்களும் இங்கே உள்ளன. 

1. நீரிழிவு மற்றும் அதிக எடை:

கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக உள்ள மாம்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீடித்த ஆற்றலை வழங்குவதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பு இல்லாதது. எனவே  நீங்கள் இதனை தினமும்  சாப்பிட்டாலும் உங்களை பருமனாக மாற்றாது. மாம்பழத்தில்  கரையக்கூடிய நார்ச்சத்து, பெக்டின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது உங்களை நீண்ட நேரம் நிறைவுற்றதாகவும், முழுதாகவும் வைத்திருக்க உதவுகிறது.

2. PCOD மற்றும் மலட்டுத்தன்மை:

வைட்டமின் B6 நிறைந்த  மாம்பழம் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், PMS  அல்லது மாதவிடாய் முன் நோய்க்குறியைக் குறைக்கவும் உதவும். மேலும் இதில் வைட்டமின் E ஏராளமாக இருப்பதால், மாம்பழம் பாலியல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு செக்ஸ் டிரைவை அதிகரிப்பதால் இது ‘காதல் பழம்’ (Love fruit) என்று அழைக்கப்படுகிறது.

3. செரிமானம் மற்றும் தோல் பிரச்சினைகள்:

இதில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது மற்றும் செரிமானத்தை சுத்தமாக வைத்திருக்கிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் A சருமத்தின் சிறந்த நண்பராகும். இது முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

4. இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு:

மாம்பழம் வைட்டமின் C யின் ஒரு சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மாம்பழத்தில் உள்ள மெக்னீசியம் செயலற்ற (inactive) T4 தைராய்டு ஹார்மோனை T3 இன் செயலில் (active) உள்ள வடிவமாக மாற்றுகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

5. கொழுப்பு மற்றும் இதய நோய்:

இதில் உள்ள அதிக அளவு ஃபோலிக் அமிலம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL  கொழுப்பைக் குறைக்கிறது. வலுவான ஆக்ஸிஜனேற்றிகளான பாலிபினால்கள் எனப்படும் சேர்மங்களும் இதில் உள்ளது. இது இதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

Views: - 189

0

0