நீரிழப்பை எவ்வாறு சமாளிப்பது என தெரியவில்லையா….. உங்களுக்கான அருமையான யோசனை!!!

4 September 2020, 2:21 pm
Quick Share

உடலில் உள்ள மொத்த நீரில் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது நீரிழப்பு ஏற்படுகிறது. பொதுவாக உடற்பயிற்சி, நோய்கள் அல்லது அதிக சுற்றுச்சூழல் வெப்பநிலை நீர் இழப்பானது, நீர் உட்கொள்ளலை மீறும் போது இந்த நிலை ஏற்படுகிறது. நீரிழப்பு ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை மட்டுமல்ல, கல்லீரல், சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. மேலும் பல செரிமான பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும். நீங்களும் நீரிழப்பை அனுபவித்து வந்தால், இங்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. 

* விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகள், ஒரு சிட்டிகை ஹகமாலயன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு  ஆகியவற்றை தங்கள் தண்ணீரில் சேர்க்க வேண்டும். உடலில் நீரேற்றம் செய்யக் காரணமான நீரில் எலக்ட்ரோலைட்டுகளை உருவாக்க இது உதவும்.

* நீங்கள் அருந்தும் தண்ணீரில் வெள்ளரி அல்லது ரோஸ் வாட்டரைச் சேர்ப்பது வெப்பமான கோடை நாட்களில் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருக்க உதவுகிறது. வெள்ளரி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை சாதாரண குடிநீரில் சேர்க்கக்கூடிய சிறந்த குளிரூட்டும் முகவர்கள்.

* அறை வெப்பநிலையில் கொதிக்க வைத்த குளிர்ந்த நீரைக் குடிப்பது சிறந்தது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு உடலை மறுசீரமைக்க வேண்டியிருப்பதால், நீண்ட சூடான நீர் குளியலை முடித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

* உங்கள் நீரேற்றம் தேவைகளுக்காக தண்ணீரை மட்டுமே நம்புவதற்கு பதிலாக, வெள்ளரிகள், முள்ளங்கி, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள் போன்ற உயர் நீர் உள்ளடக்கங்களைக் கொண்ட ஃபிரஷான  பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் எடுக்கலாம்.

* சாமந்தி பூ, துளசி, சீரகம் தூள், கொத்தமல்லி தூள், பெருஞ்சீரகம் தூள் போன்ற மூலிகைகள் ஒரு கிளாஸ் மந்தமான தண்ணீருடன் எடுத்துக் கொள்வது உங்களை நீரேற்றமாக வைக்க உதவுகின்றன.

* தேநீர், காபி, இனிப்புகள், வறுத்த உணவுகள் மற்றும் மது ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

* ஒரு நல்ல வளர்சிதை மாற்றத்தைக் கொண்ட பயிற்சி இந்த காலத்தின் தேவை.

Views: - 0

0

0