ஆரோக்கியம்

காலை உணவுக்கு வேக வைத்த முட்டையா… ஆம்லெட்டா… இரண்டுல எது பெஸ்ட்???

காலை உணவுக்கு ஹெல்தியான மற்றும் சிறந்த ஒரு பிரேக்ஃபாஸ்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று வரும் பொழுது வேக வைத்த முட்டைகள் மற்றும் ஆம்லெட் ஆகியவை சிறந்த ஆப்ஷன்களாக உள்ளன. இதன் தனித்துவமான பண்புகள் மற்றும் உடலுக்கு வழங்கும் நன்மைகள் காரணமாக பலர் காலையில் முட்டை சாப்பிடுவதை விரும்புகின்றனர். முட்டை என்பது விரைவாக செய்யக்கூடிய அதே நேரத்தில் குறைந்த கலோரிகள், புரோட்டீன், வைட்டமின்கள் A, B12 மற்றும் செலினியம் போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது. 

இந்த ஊட்டச்சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவது, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தருவது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை  மேம்படுத்துவது போன்ற நன்மைகளை வழங்குகிறது. முட்டைகளை எண்ணெய் அல்லது கொழுப்புகள் எதுவும் சேர்க்காமல் வேகவைத்து சாப்பிடுவது புரோட்டீனின் சுத்தமான ஒரு ஆதாரமாக அமைகிறது. இது நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு ஆரோக்கியமான ஆப்ஷன். 

இதையும் படிச்சு பாருங்க:  மசாலா ஃபிரைடு சிக்கன்… சண்டேக்கு ஏற்ற சரியான ரெசிபி இது தான்!!!

மறுபுறம் ஆம்லெட் என்பது வண்ணமயமான காய்கறிகள், சீஸ், பட்டர் மற்றும் ஆரிகானோ போன்ற பிளேவர்ஃபுல்லான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் நம்முடைய காலை உணவை திருப்திகரமானதாக மாற்றி ஆரோக்கியமான தசை, செரிமானம் மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான இதயத்தை தருகிறது. எனினும் ஆம்லெட் செய்யும் போது நீங்கள் அளவுக்கு அதிகமான எண்ணெய் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது. 

அது உங்களுடைய உணவை சற்று ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும். வேகவைத்த முட்டைகளுடன் ஒப்பிடும்பொழுது ஆம்லெட்டில் அதிக கலோரிகள் காணப்படுகிறது. எனினும் உங்களுடைய நாளை ஒரு சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவோடு ஆரம்பிப்பதற்கு இது ஒரு திருப்திகரமான ஆப்ஷன். நீங்கள் வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் எதனை தேர்வு செய்தாலும் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். இறுதியாக சிறந்த ஒரு பிரேக்ஃபாஸ்ட் ஆப்ஷன் என்பது உங்களுடைய தனிப்பட்ட உணவு சார்ந்த இலக்குகள் மற்றும் விருப்பங்களை பொறுத்து அமையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

13 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

14 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

14 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

14 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

14 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

15 hours ago

This website uses cookies.