அனைத்து விதமான பாலியல் பிரச்சினையை சமாளிக்க உதவும் சாதாரண கிழங்கு!!!

19 April 2021, 3:45 pm
Quick Share

ஒவ்வொரு ஹார்மோனும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், உண்மை தான்! ஹார்மோன்கள் நம் உடலில் உள்ள பெரும்பாலான உடலியல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. இதன் காரணமாக தான் ஹார்மோன்களில் ஏற்படும் எந்த ஒரு  ஏற்றத்தாழ்வும் பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். உண்மையில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என்பது நாம் நினைப்பதை விட கடினமானது ஆகும். 

எனவே, ஹார்மோன்களில் சமநிலை இருப்பது மிக முக்கியம். இது நம் தூக்க சுழற்சி, பசி, வளர்சிதை மாற்றம், பாலியல் செயல்பாடு, இனப்பெருக்க சுழற்சி, மனநிலை மற்றும் பல  உடல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் ஹார்மோன்கள் சீரானதாக இருக்கும்போது, ​நமது  உடல் அதிக செயல்திறனைக் காட்டுகிறது.

ஆனால் இதனை நினைத்து கவலைப்பட வேண்டாம். இந்த ஹார்மோன்களை சமப்படுத்த இயற்கை உணவுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் மக்கா வேர். இது ஒரு பழங்கால சூப்பர்ஃபுட் மற்றும் ஒரு வேர் காய்கறி ஆகும். கிராமப்புறங்களில் இது பெருதேயகிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது PMS, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் பாலியல் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல ஹார்மோன் பிரச்சினைகளை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

மக்கா கிழங்கு நம்பகமான நற்பெயரைப் பெற்றுள்ளது. ஏனெனில் இது உடலில் உள்ள  ஹார்மோன்களை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சமப்படுத்த உதவுகிறது. இது நம்  ஹார்மோன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து நிரப்பியாகும். 

இதில் வைட்டமின்கள் C, A, மற்றும் B2, BY மற்றும் நியாசின் நிறைந்துள்ளது.

இதில் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் அயோடின் போன்ற தாதுக்கள் உள்ளன.

இது கார்போஹைட்ரேட்டின்  நல்ல மூலமாகும். இதில்  கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் நார்ச்சத்து உள்ளது.

இது ஸ்டெரால்ஸ், கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளது. 

சரியான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய எண்டோகிரைன் (ஹார்மோன்) அமைப்பை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில்  உள்ளன. மேலும், இது நம் உடலை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது

Views: - 138

1

0