உங்கள் துணைவரின் நாள்பட்ட நோயை கையாள இது தான் சரியான வழி!!!

6 August 2020, 5:00 pm
Quick Share

எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நோய்கள் வருகின்றன. இது யாருக்கும், எந்த நேரத்திலும் நிகழலாம். ஆனால் அது உங்கள் உடன் இருக்கும் உங்கள் துணவருக்கு நேர்ந்தால் அது மிகவும் வருத்தமாக இருக்கும். உங்கள் துணைவர்  உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற உண்மையை திடீரென்று நீங்கள் சந்திக்க நேரிடும் போது உங்களுக்கு மனக்கவலை ஏற்படும். 

உங்கள் துணைவர் ஏதேனும் நீண்டகால உடல்நிலை பிரச்சனையில் இருந்தால் இது இன்னும் வருத்தமளிக்கிறது. கற்பனை செய்து பாருங்கள், சிறிதளவு உடல்நலக்குறைவு கூட உங்கள் உறவின் இயக்கத்தை மாற்றும் போது, ​​அவர் அல்லது அவள் சில நாள்பட்ட நோயால் கண்டறியப்பட்டால் என்ன நடக்கும். திடீரென்று, நீங்கள் பார்க்கும் முறையை மாற்றி உங்கள் உறவை சமாளிக்க வேண்டும். நீங்கள் பராமரிப்பாளராகி விடுங்கள். 

ரொமான்ஸ் எல்லாம் சிறிது நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் துணைவரை  கவனிப்பதில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். நீங்கள் வலுவாக இல்லாவிட்டால் இது உங்கள் உறவை பாதிக்கும். இது கடினமான நேரத்திற்கு வழிவகுக்கும் ஒரு சவால். ஆனால் இதை நீங்கள் அன்புடனும் இரக்கத்துடனும் வெல்ல முடியும். இந்த கடினமான நேரத்தை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம் மற்றும் உங்கள் துணைவரின் நாட்பட்ட நோயை எவ்வாறு எளிதில் வெல்லலாம்  என்பதைப் பார்ப்போம்.

1.பேச்சுதொடர்பு முக்கியமானது:

உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். உங்கள் துணைவர் என்ன உணர்கிறார் அல்லது என்ன செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் துணைவரை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள உதவும். மேலும் நிலைமையை சிறந்த முறையில் சமாளிக்க முடியும்.

2. ஒரு ஆதரவு குழு வேண்டும்:

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அணுகவும். விஷயங்கள் கடினமாக இருக்கும்போது, ​​அவர்களுடன் பேசுங்கள். இது உங்கள் உணர்வுகளைப் சமாளிக்க உதவும். நோய்வாய்ப்பட்ட ஒருவரை கவனித்துக்கொள்வதினால் ஏற்படும் அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட இது உதவும். உங்கள் துணைவரின்  நண்பர்களுடன் அவரை பேச வைக்க நீங்கள்  ஊக்குவிக்கலாம். இது மனச்சோர்வு மற்றும் தனிமை உணர்வுகளை விலக்கி வைக்கும்.

3. கடந்த காலத்தை கொண்டு வாருங்கள்:

விஷயங்கள் கையை மீறி போகும்போது, ​​கடந்த காலத்தை மீண்டும் பார்வையிடவும். நீங்கள் பகிர்ந்த அனைத்து நல்ல நேரங்களையும், நீங்கள் சிரித்த நகைச்சுவையையும் நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதுவும் கடந்து செல்லும். நீங்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை மறந்துவிடாதீர்கள். உங்கள் துணைவருடன் அன்போடு பேசுங்கள். உங்கள் இருவருக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுங்கள். இது உங்கள் துணைவரின் நாள்பட்ட நோயைச் சமாளிக்க நிச்சயமாக உதவும்.