தினமும் கீரை சாப்பிடணும்னு சொல்றாங்க… அது ஏன்னு இப்போ நீங்க தெரிஞ்சுக்கோங்க!!!

18 September 2020, 2:00 pm
Quick Share

துளசியின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பல நூற்றாண்டுகளாகவே இது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. துளசியை கொண்டு பல வீட்டு வைத்தியங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேநீரின் சுவையை கூட்டுவதற்கு துளிசி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. துளசியில் வைட்டமின் A, வைட்டமின் D, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி வழிகிறது. இப்போது துளசியின் சுகாதார நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

●மன அழுத்தத்தை குறைக்க உதவும் அடாப்டோஜன்கள் துளசியில் அதிக அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தற்போது பலரும் இந்த மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வருவதால் துளசி இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். 

●குடலின் செரிமான இயக்கத்தை மேம்படுத்த துளசி உதவுகிறது. துளசி ஒரு சிறந்த அமில ரிஃப்லக்ஸாக அமைந்து சரியான pH அளவை பராமரிக்கிறது. எனவே செரிமானம் சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபட தினமும் மூன்றில் இருந்து நான்கு துளசி இலையை உணவிற்கு பிறகு மென்று வாருங்கள்.

●இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் மூலக்கூறுகள் துளசி இலைகளில் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி, அதனை ஆற்றலாக மாற்றுகிறது. 

●துளசியை பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது சளிக்கு ஒரு சிறந்த மருந்து என்பது தான். சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் துளசியை கஷாயமாக செய்து பருகி வரலாம். 

●துளசியை வாயில் போட்டு மென்று வருவதால் அதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்பானது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. மேலும் ஒரு நல்ல புத்துணர்ச்சியையும் தருகிறது. 

●ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்த துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸுகள் ஆகிய இரண்டையும் எதிர்த்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை துளசி அளிக்கும். 

●உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வெறும் வயிற்றில் துளசியை மென்று வர வேண்டும். இவ்வாறு செய்து வர முகப்பரு, வடுக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அது மட்டும் இல்லாமல் துளசியில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

Views: - 6

0

0