கொரோனா சமயத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த இந்த காயை கண்டிப்பா சாப்பிடுங்க!

13 May 2021, 11:13 am
Powerful Health Benefits of Drumsticks
Quick Share

தீவரமாக பரவி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பித்துக்கொள்ள நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது போன்ற சமயத்தில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  முருங்கைக்காய் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் முருங்கை கொண்டுள்ளது. அது  என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். முருங்கை இலைகள், காய்கள் மற்றும் பூக்கள் என அனைத்துமே உடலுக்கு நன்மை தரும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது மற்றும் தாவரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ குணம் நிரம்பியுள்ளது. அதன் முழு நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள முருங்கைக்காயை தவறாமல் சாப்பிடுவது முக்கியம். இதில் என்னென்ன சத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

முருங்கை இலைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். உங்கள் அன்றாட உணவில் முருங்கை காய் மற்றும் முருங்கை கீரையைச் சேர்த்துக்கொண்டால் அன்றாடம் மருந்து கடை பக்கம் போக வேண்டிய தேவையே இருக்காது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் ஆனால் தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது, இதனால் இதய நோய்களும் ஏற்படும். முருங்கைக்காய் இரத்த சர்க்கரை அளவை சீராக குறைக்கும் என்பதால் அதை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முருங்கையில் இருக்கும் ஐசோதியோசயனேட்டுகள் போன்ற தாவர கலவைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் முருங்கைக்காய் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் முகவராகவும் செயல்படுகிறது. முருங்கைக்காயை தவறாமல் உணவோடு எடுத்துக்கொள்வது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

முருங்கைக்காய் ஒரு நோயெதிர்ப்பு ஊக்கியாக செயல்படுகிறது, இது காய்ச்சலின் போது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இந்த கொரோனா சமயத்தில் முருங்கைகாய், முருங்கை கீரை எல்லாம் கட்டாயம் தவிர்க்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

முருங்கைக்காயில் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்பு கட்டமைப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு அடர்த்தி குறைவதைத் தடுக்கிறது மற்றும் உடல் ஆற்றலை மேம்படுத்துகிறது.

Views: - 313

0

0