அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கிற பழக்கம் இருக்கா உங்களுக்கு… நீங்க தான் இத தெரிஞ்சுக்கணும்!!!

Author: Hemalatha Ramkumar
9 June 2023, 7:30 pm
Quick Share

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நீர் இன்றியமையாத ஒன்றாகும். மனித உடலில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவிற்கு நீர் உள்ளது. நாம் ஆரோக்கியமாக வாழ தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். நமது உடலின் வெப்பநிலையை சமநிலையாக வைக்கவும், நமது உடலில் உள்ள கழிவுகளை வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியேற்றவும் நீர் அவசியம் தேவைப்படுகிறது.

அதிகப்படியான வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை வழியாக நீர் வெளியேறும் போது நமது உடல் மிகவும் சோர்வடைகிறது. கோடை காலங்களில் இந்த நிலை அடிக்கடி பலருக்கு வருகிறது. எனவே இதனை போக்க நாம் நீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

கோடை காலங்களில் தொண்டைக்கு இதமாக இருக்கிறது என நினைத்து பலர் குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிக்கின்றனர். பலரின் தேர்வாக இருக்கும். ஆனால் பல ஆய்வுகளின் கூற்றுப்படி, கோடை காலம் அல்லது நமது உடல் அதிக வெப்ப நிலையில் இருக்கும் போது குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிப்பது உடன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பற்களின் உணர்திறன் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களை மெல்லுவதில் சிரமம் ஏற்படுகிறது. பற்கூச்சம் உள்ளவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது.

அதிக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானம் அல்லது குளிர்ந்த நீர் குடிக்கும் போது நமது தலையின் பின்பக்கம் லேசான வலி ஏற்படுவது போல உணர்வீர்கள் இதற்கு காரணம் மூளையில் உள்ள சில நரம்புகள் உறைந்து நரம்புகளில் ஏற்படும் பாதிப்பாகும்.

குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது உடலில் தேங்கியிருக்கும் உங்களை கொழுப்புகளை உறைய செய்து கொழுப்புகள் எரிக்கப்படுவதை தாமதப்படுத்துகிறது. எனவே எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும்.

குளிர்ந்த நீர் எதிர் அழற்சி பண்புகளை உடையது. இதனால் இரத்த நாளங்கள் சரியாக செயல்பட முடியாமல் வயிறு இருக்குவதால் வயிற்றில் வலி மற்றும் செரிமான கோளாறு ஏற்படுகிறது.

குளிர்ந்த நீர் குடிக்கும் போது உங்கள் கழுத்திற்கு பின்புறமுள்ள வாகஸ் என்னும் நரம்பு திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் சாதாரண வெப்பநிலையை அடையும் வரை உங்கள் இதய துடிப்பு குறைகிறது.

பொதுவாக குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு தொண்டை கரகரப்பு சளி தும்மல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

குளிர்ந்த நீர் முதுகெலும்பு பகுதியில் இருக்கக்கூடிய நரம்புகளை குளிர்விக்கிறது. காரணமாக இதனால் மூளை பாதிக்கப்பட்டு தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் தோன்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 323

0

0