செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்க நீங்க என்னென்ன செய்யணும் தெரியுமா? இயற்கையான டிப்ஸ் இதோ

Author: Dhivagar
31 July 2021, 6:01 pm
Proven Ways to Increase Testosterone Levels Naturally
Quick Share

டெஸ்டோஸ்டிரோன் என்பது மிகவும் முக்கிய ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆகும், இது பெண்களிலும் சிறிய அளவில் உண்டு. எனவே இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மிகவும் உபயோகமானது.

டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும், இது ஆண்களின் விந்தணுக்களிலும் மற்றும் பெண்களின் கருப்பையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அட்ரீனல் சுரப்பிகளும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன.

பருவமடையும் போது, அதிகரித்த தசை, ஆழ்ந்த குரல் மற்றும் முடி வளர்ச்சி போன்ற பல உடல் மாற்றங்களுக்கான முக்கிய காரணமாக இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அமைகிறது.

இருப்பினும், வயதாகும் போதும் மற்றும் முதுமையின் போது இது குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டியது முக்கியம்.

பெரியவர்களில், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு, உடல் அமைப்பு, பாலியல் செயல்பாடு மற்றும் பல உடல் நல செயல்பாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானது.

சுவாரஸ்யமாக, இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நல்வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரு பாலினத்தவர்களுக்கும் ஆரோக்கியமான அளவிலான டெஸ்டோஸ்டிரோன் இருப்பது மிகவும் முக்கியமானது.

டெஸ்டோஸ்டிரோன் அளவை இயற்கையாக அதிகரிக்க பயனுள்ள இயற்கையான வழிகளை உங்களுக்காக இங்கே பரிந்துரைத்துள்ளோம்.

உடற்பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதனால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பளு தூக்குதல், ஓட்டம் போன்ற உடல் பயிற்சிகளை செய்வதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம்.

சத்தான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் அளவான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. முடிந்தவரை உடலுக்கும், மனதுக்கும் அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோல் வெளியாவதனால் டெஸ்டோஸ்டிரோன் வெளியீடு குறையக்கூடும்.

உடலுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் இயற்கையான வைட்டமின் சத்தான வைட்டமின் D ஐ பெற வேண்டும். வீடு, அலுவலகம் என ஒரே இடத்தில் முடங்கி இருக்காமல் வெயிலிலும் சென்று ஓடி ஆடி பழக வேண்டும்.

போதுமான வைட்டமின் A, C, E மற்றும் தாதுக்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

முடிந்தவரை சரியான இடைவேளையில் போதுமான ஓய்வு மற்றும் இரவில் 7 மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டும். தூக்கம் குறைபாட்டினால் உண்டாகும் மன அழுத்தம் காரணமாக உங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் வெளியீடு பதிப்படையக்கூடும்.

இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர்களான இஞ்சி, பூண்டு, கீரைகள், மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

சுத்தமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்ற போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது. 

Views: - 878

3

0